சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த 5 பழக்கங்கள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2025, 02:49 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிக்கலாம்.
  • மதிய உணவில் பச்சை வெங்காய சாலட் சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
  • சரியான எண்ணெயைத் தேர்வு செய்வது நல்லது.
சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த 5 பழக்கங்கள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

Best Practices For Diabetes Control: நீரிழிவு என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். அது ஒருமுறை ஏற்பட்டால், இதை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. எனினும், சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமாக இதை கட்டுக்குள் வைக்கலாம். இவற்றின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பெருமளவில் பழைய நிலைக்கு மாறவும் முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் அன்றாட வழக்கத்தில் சில எளிய பழக்கங்களைச் சேர்ப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளில் இன்சுலின் சார்பு நிலையையும் குறைக்கும். 

Add Zee News as a Preferred Source

நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆரோக்கியமான சில தினசரி பழக்கவழக்கங்களும் சரியான வகையான உணவுமுறையும் நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும் படிப்படியாக குறைப்பதற்கும் உதவும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீரிழிவு நோயாளிகள் இந்த 5 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்

வெந்தய நீர்

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிக்குமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு, 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கவும். வெந்தய விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உடலில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இது தவிர, வெந்தய விதைகளில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் சேர்மங்கள் இருப்பதாக பல சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பச்சை வெங்காய சாலட்

நீரிழிவு நோயாளிகள் மதிய உணவிற்கு பச்சை வெங்காய சாலட் சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வெங்காயம் சாப்பிடுவதால் சில மணி நேரங்களுக்குள் இரத்த சர்க்கரை குறைகிறது. வெறும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், 4 மணி நேரத்திற்குள் சர்க்கரை அளவு குறையும். கூடுதலாக, வெங்காயம் சாப்பிடுவது உடலின் இன்சுலின் ரெஸ்பான்சை மேம்படுத்துகிறது.

சரியான எண்ணெயைத் தேர்வு செய்க

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலாக, கோல்ட் ப்ரெஸ்ட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அவை இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

சாப்பிட்ட பிறகு 500 அடிகள் நடக்கவும்

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பிறகும், 500 அடிகள் நடக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதைச் செய்வதன் மூலம் உடலின் தசைகள் சுறுசுறுப்படைந்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் ஆற்றலாகப் பயன்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இரவில் நெல்லிக்காய்-மஞ்சள் தண்ணீர் குடிக்கவும்.

இவை அனைத்தையும் தவிர, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு இரவும் நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் நீரைக் குடிக்க உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது, இது இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், மஞ்சள் இன்சுலினை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

இந்த எளிய நடவடிக்கைகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்தால், நீரிழிவு நோயின் நிலையைப் பெருமளவில் மேம்படுத்தலாம் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவு சாப்பிட்ட பிறகு ஒரு ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

மேலும் படிக்க | அதிகமாக கோபப்படுபவர்களுக்கு வரும் மாரடைப்பு, அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News