காலை உணவுக்கு ஏற்ற புரதம் நிறைந்த சுவையான புட்டு.... எளிய ரெஸிபி இதோ

முளை கட்டிய தானியத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டும் போது, அதில் உள்ள வைட்டமின் சி சத்தும் அதிகரிக்கிறது. இந்த சத்துக்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 2, 2025, 10:05 PM IST
  • முளை கட்டிய உள்ள தானியங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
  • நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து பசியையும் கட்டுப்படுத்துகிறது.
  • முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் மிக குறைவாகவும், நார்ச்சத்து மிக அதிகமாகவும் உள்ளது.
காலை உணவுக்கு ஏற்ற புரதம் நிறைந்த சுவையான புட்டு.... எளிய ரெஸிபி இதோ

முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதற்கான முக்கிய காரணம் முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மத்திப்பு  அளவு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் ஜீரணமாகிறது. மேலும் தானியங்களில் உள்ள சில ஆண்டி ந்யூட்ரியண்ட்ஸ் அழிக்கப்பட்டு, உடல் அதிகபட்ச ஊட்டச்த்துக்களை பெற உதவுகிறது. மேலும், செரிமானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.

Add Zee News as a Preferred Source

முளை கட்டிய தானியத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டும் போது, அதில் உள்ள வைட்டமின் சி சத்தும் அதிகரிக்கிறது. இந்த சத்துக்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

முளை கட்டிய தானியங்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

1. முளை கட்டிய தானியங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. முளை கட்டிய தானியங்களில் புரதம் அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

2. முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் மிக குறைவாகவும், நார்ச்சத்து மிக அதிகமாகவும் உள்ளதால், தொப்பை கொழுப்பு, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து பசியையும் கட்டுப்படுத்துகிறது.

3. முளை கட்டிய  உள்ள தானியங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.  இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுவதால், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

4. முளை கட்டிய தானியங்களில் ஏராளமான நார்ச்சத்து, ஜீரண சக்தியை தூண்டி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
 
முளை கட்டிய தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் காரபுட்டு ரெஸிபி

தேவையான பொருட்கள்: 

முளைகட்டிய பாசிப்பயறு - 1 கப்

முளைகட்டிய கொண்டைக்கடலை - 1 கப்

முளைகட்டிய கொள்ளு

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்

பூண்டு - 2 பல்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

காய்ந்த மிளகாய் - 2 முதல் 4

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

முளைகட்டிய பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய கொண்டைக்கடலை பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் அதில கிள்ளிய கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும். தேவைப்பட்டால், இதனை கிள்ளி மிக்ஸியில் பொடியாக செய்தால், மணல் போல் உதிர் உதிராக வந்துவிடும். பின்னர்,கடாயில் நல்லெண்ண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் பொடி செய்த முளை கட்டிய தானியங்களை சேர்ந்து கலந்தால், சுவையான புட்டு ரெடி.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்க உதவும் 4 பெஸ்ட் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வை வழங்கும் சில... சிறந்த வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News