)
Protein Rich Foods: பனீர் புரதச்சத்து நிறைந்த ஒரு உணவாக கருதப்படுகின்றது. ஆனால், சிலருக்கு பனீர் சாப்பிட அத்தனை பிடிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு புரத்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. புரதம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எடையைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ, அனைத்து வகையிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
புரதச்சத்து அவசியம்
- உடலில் புரதத்தின் அளவு குறைந்தால், உடல்நலம் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
- சோர்வு, பலவீனம், எலும்பு வலி போன்ற பிரச்சனைகளை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
- பனீர் சாப்பிடாதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், புரதச்சத்தை சேர்க்க, உங்கள் உணவில் தினமும் சேர்த்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோயாபீன்ஸ்
உங்கள் தினசரி உணவில் சோயாபீன் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏராளமான புரதத்தை அளிக்கும். இது தசைகளை உருவாக்குவதற்கும் உடல் ஆரோக்கியத்தை சீராக்கவும் மிகவும் நன்மை பயக்கும். அதை கறியாகவோ அல்லது வேகவைத்து சாட் போலவோ, அல்லது கிரேவி செய்தோ உட்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை
வெள்ளை அல்லது பிரவுன் கொண்டைக்கடலை வகைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அவற்றை வேகவைத்து, சுண்டலாக, சாலட் போல் செய்து அல்லது பிற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். இவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கினோவா
கினோவா என்பது பசையம் இல்லாத தானியமாகும். இதில் புரதம் மிக அதிகமாக உள்ளது. இதை புலாவ், சாலட் அல்லது காலை உணவில் சேர்க்கலாம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பல ட்யட் பிரியர்கள் இப்போதெல்லாம் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள்.
பருப்பு வகைகள்
பச்சை பயறு, மசூர் பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் அதிக அளவு புரதம் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றை நாம் நமது அன்றாட சமையலிலும் பயன்படுத்துகிறோம். அவை புரதத்தின் நல்ல மூலமாகக் கருதப்படுகின்றன. இந்த பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது புரதச்சத்தின் குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.
சைவ இறைச்சி
சீடன் ஒரு சைவ இறைச்சி வகை உணவாகும். இது கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் அதிக புரத உணவு. இது கோழியைப் போலவே தோற்றமளிக்கும் மற்றும் சுவையாகவும் மிகவும் சத்தானதாகவும் இருக்கும்.
டெம்பே
டெம்பே என்பது புளித்த சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்தோனேசிய உணவு. இதில் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. அவை செரிமானத்திற்கு நன்மை பயக்கும். புரதச்சத்து குறைப்பாட்டை போக்க இதை தினமும் உணவில் சேர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ