Soups for Diabetes Control: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமற்ற, நீரிழிவு நோய்க்கு சேராத உணவுகளை சிறிது உட்கொண்டாலும், அது உடலில் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். ஆகையால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளுக்கு, ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. ஏனெனில் அத்தகைய உணவுகள் கொழுப்பை அதிகரித்து உடலில் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாறாக, பல சைவ உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாமல், இரத்த சர்கரை அளவையும் கடுக்குள் வைக்க உதவி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. சுகர் நோயாளிகள் சில சிறப்பு வகை சைவ சூப்களை குடித்தால், குளுக்கோஸின் அளவைக் குறைப்பது மிகவும் எளிதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சைவ சூப்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த சைவ சூப்களை குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
1. Tomato Soup: தக்காளி சூப்
தக்காளி சூப் தயாரிக்க, 2 தக்காளி, 1 சிவப்பு மிளகாய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் அரைத்த பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தை கேஸில் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக வேக வைக்கவும். அதன் பின்னர் இதை சிறிது நேரத்திற்கு குறைந்த தீயில் சமைக்கவும். பின்னர் கேஸை அணைத்து, அது குளிர்ச்சியடையும் வரை காத்திருக்கவும். பின்னர் கலவையை மிக்சியில் அரைக்கவும். இப்போது மீண்டும் ஒருமுறை அதை கேஸில் வைத்து சூடாக்கி, கருப்பு உப்பு சேர்த்து பருகவும்.
2. Masoor Dal Soup: மசூர் பருப்பு சூப்
மசூர் பருப்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சூப் செய்து குடிப்பதும் மிக நல்லது. மசூர் பருப்பு சூப் செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் விட்டு, அதில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், கேரட், கேப்சிகம் ஆகியவற்றை போட்டு 10 நிமிடங்களுக்கு வேக வைக்வும். இறுதியாக, சுவைக்கு மேலே ஆர்கனோ இலைகளைச் சேர்க்கவும். முழுமையாக சமைத்த பிறகு, அதை ப்ளெண்ட் செய்து குடிக்கவும்.
3. Mushroom Soup: காளான் சூப்
காளான் சூப் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இதை செய்ய, ஒரு கப் காளான், ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, அரை கப் குறைந்த கொழுப்புள்ள பால், அரை கப் நறுக்கிய வெங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கேஸில் வாணலி வைத்து வெங்காயத்தை குறைந்த தீயில் வதக்கவும். அதன் பிறகு அனைத்து பொருட்களுடன் அரை கப் தண்ணீரையும் சேர்த்து வாணலியில் சேர்க்கவும். 6 முதல் 7 நிமிடங்கள் சமைத்த பிறகு, கேஸை அணைக்கவும். இப்போது இந்த கலவையை பாலில் சேர்த்து கலக்கவும். அதன் பின்னர் இப்போது ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயை ஊற்றி, இந்தக் கலவையை அதில் சேர்த்து குறைந்த தீயில் சமைத்து பருகவும்.
இவை அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனினும், சர்கரை நோயாளிகள் மருத்துவரை அணுகி, உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, மருத்துவரின் அறிவுரையின் படி மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்தத் தவறுகள்... நடைப்பயிற்சியை பலன் இல்லாமல் ஆக்கிவிடும்
மேலும் படிக்க | தீராத தலைவலியை தீர்க்க ஒரே வழி! தினமும் காலையில எழுந்து..‘இதை’ பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









