Weight Loss With Vegan Diet: தற்போது சைவ உணவை அடிப்படையாகக் கொண்ட வேகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் தாவர வகை உணவுகள். விலங்கு மூலம் பெறப்படும் எந்த வகை உணவுகளும் அதில் சேர்க்கப்படாது. அதாவது பால் முட்டை மீன், இறைச்சி உணவுகள் என எதுவும் டயட்டில் சேர்க்கப்படாது.
வேகன் டயட் மிகவும் பிரபலமாகி வருவதற்கான காரணம் அதில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், அதன் மூலம் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளும் தான். வேகன் டயட்டில் பருப்பு வகைகள், தாவரங்கள் அடிப்படையிலான பால், இறைச்சிக்கான மாற்று உணவுகள் ஆகியவை இடம் பெறும். வேகன் உணவு முறை மூலம் உடல் எடை கணிசமாக குறையும் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
வேகன் டயட் மூலம் உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியது என்ன
வேகன் உணவு முறையில், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன. ஏனெனில் இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது என்பதோடு, இது உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும். உடல் பருமனை குறைக்க கொழுப்பை எரிக்க செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் உணவில் பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் தவறாமல் இடம்பெற (Health Tips) வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் காய்கறிகள்
காய்கறிகளில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், உடல் எடையை குறைப்பதோடு, உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் உதவுகின்றன. காய்கறிகளில் பச்சை நிற காய்கறிகள் குறிப்பாக கீரைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வேகன் டயட் முறையில் வலியுறுத்தப்படுகிறது.
பீன்ஸ் வகை பருப்புகள் தவறாமல் இடம்பெற வேண்டும்
காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், பீன்ஸ் பருப்பு வகைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். இதில் எண்ணற்ற புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தசைகளை வெளிப்படுத்தி, உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. புரதம் இல்லாமல் எடை இழப்பு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீன்ஸ் வகை பருப்புகளில் சோயா கொத்துக்கடலை, ஆகியவை உடல் கொழுப்பை எரிக்க மிகச்சிறந்த தேர்வுகளாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஆரோக்கிய கொழுப்புகள் என்று அழைக்கப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடல் எடை குறைய அவசியம். இவை உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனைப் பெற, பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவை தவறாமல் இடம்பெற வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் வலி அடிக்கடி ஏற்படுகிறதா... பொதுவான 6 காரணங்கள் இவைதான்
மேலும் படிக்க | 114 கிலோவில் இருந்த பெண்... 69 கிலோவுக்கு குறைய அவர் செய்த 4 பழக்கங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









