Weight Loss Tips: ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் செயல்பாடுகள் இல்லாத நிலை, போதுமான அளவு தூக்கமின்மை மற்றும் இன்னும் பல காரணங்களால் மக்கள் எடை அதிகரிப்பால் அவதிபடுகிறார்கள். உடல் எடையை குறைக்க மக்கள் அதிகம் நாடும் வழிமுறை என்ன? தொப்பை கொடுப்பை குறைக்க மக்களுக்கு நம்பகமான முறையாக இந்த ஆண்டு இருந்தது எது? இந்த பதிவில் இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Year Ender 2025, Best Weight Loss Plans
2025 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. ஆண்டு முடிவடையும் நிலையில், அனைவரும் அனைத்து துறைகளிலும் அதிகம் பேசப்பட்ட, பிரபலமான விஷயங்களைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். உடல் எடையை குறைக்க இந்த ஆண்டு மக்கள் என்னவெல்லாம் செய்தார்கள்? எந்த டயட் 2025 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான டயட்டாக இருந்தது? இந்த ஆண்டு உடல் பருமனை குறைக்க அதிகமான மக்கள் செய்தது என்ன?
Best Weight Loss Diet Plans of 2025
2025 ஆம் அண்டில் பலரால் பின்பற்றப்பட்டு, உடல் எடையையும், தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவிய 5 டயட் பிளான்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Balanced Diet: சமச்சீர் உணவு
சமச்சீர் உணவு டயட் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பிடித்தமான உணவுக் கட்டுப்பாட்டு வழியாக இருந்துள்ளது. துரித உனவுகள் மற்றும் ஜங்க் உணவுகளுக்கு பதிலாக சமச்சிர் உணவில், 40% காய்கறிகள், 30% கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 35% புரதத்தில் கவனம் செலுத்தப்பட்டது. எடை இழப்புக்கான இந்த எளிய அணுகுமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது. இது பின்பற்ற எளிதாக இருக்கவே, இந்த முறை இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பிரபலமாகவும் இருந்தது.
Protein Diet: ஜிம் செல்வோருக்கான புரோட்டீன் டயட்
இந்த ஆண்டு ஜிம் செல்வோரிடையே புரத உணவுகள் மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. பருப்பு, பாலாடைக்கட்டி, டோஃபு, முளைகட்டிய உணவுகள் மற்றும் கிரேக்க தயிர் போன்ற புரதங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இவை சுவையான உணவாக அமைவதோடு, வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வையும் அளிக்கின்றன. புரத உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
Intermittent Fasting: இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்
2024 ஆம் ஆண்டைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த வகையான உணவுமுறையை கடைபிடிப்பவர்கள் ஒரு வேளை சாப்பிட்ட பிறகு 15-16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கின்றனர். இப்படி செய்வதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், பசியும் கட்டுக்குள் இருக்கின்றது.
Low Carb Diet: குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை
2024 இல் தொடங்கிய கீட்டோ உணவுமுறை, 2025 இல் அதன் பிரபலத்தை இழந்ததாகத் தோன்றியது. அதற்கு பதிலாக, மக்கள் குறைந்த கார்ப் உணவை அதிகம் தேர்ந்தெடுத்தனர். அரிசி மற்றும் ரொட்டியை மக்கள் குறைவாகவே உட்கொண்டனர். அவற்றுக்கு பதிலாக காய்கறிகளுடன் புரதத்தையும் தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொண்டனர்.
No Sugar Diet: பூஜ்ஜிய சர்க்கரை உணவுமுறை
2025 ஆம் ஆண்டில், எடையைக் குறைக்க விரும்புவோர் தங்கள் உணவுகளில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக நீக்கி பூஜ்ஜிய சர்க்கரை உணவுமுறையை முயற்சித்தனர். 3 Month No Sugar Challenge, 30 Day No Sugar Challenge அகியவை இந்த ஆண்டு மிக பிரபலமாக இருந்தன. இனிப்பு சுவைக்கான மாற்றாக தேங்காய், வெல்லம் மற்றும் பேரீச்சம்பழங்களுக்கான தேவை அதிகரித்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலையா? மாலையா? உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது? தமன்னா ட்ரெயினர் கூறும் விஷயம்..
மேலும் படிக்க | சிக்கன், மட்டன் உடலுக்கு சூடா? இது தெரியாம சாப்பிடாதீங்க.. உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









