மெட்டபாலிசத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரிக்கும்... சில சிறந்த வெயிட் லாஸ் பானங்கள்

உடல் பருமனை, தொப்பை கொழுப்பை எரிக்க மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். வளர்ச்சிதை மாற்றம் நன்றாக இருந்தால் மட்டுமே அதிக கலோரிகளை எரித்து, உடல் பருமனை குறைக்க முடியும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2025, 08:51 PM IST
  • அகத்தை சீர் செய்யும் ஆற்றல் கொண்ட சீரகம், அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலாக்களில் ஒன்று.
  • நெல்லிக்காய் சுமார் 100 நோய்களை தீர்க்கும் அருமருந்து என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • இலவங்க பட்டை கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட மிகச்சிறந்த மசாலாக்களில் ஒன்று.
மெட்டபாலிசத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரிக்கும்... சில சிறந்த வெயிட் லாஸ் பானங்கள்

உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்ட நிலையில், உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பை எரிக்க, பல வகைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாம் காணலாம். உடல் பருமனை, தொப்பை கொழுப்பை எரிக்க மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். வளர்ச்சிதை மாற்றம் நன்றாக இருந்தால் மட்டுமே அதிக கலோரிகளை எரித்து, உடல் பருமனை குறைக்க முடியும்.

Add Zee News as a Preferred Source

மெட்டபாலிசத்தை தூண்டும் வெயிட் லாஸ் பானங்கள்

உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும் சில வெயிட் லாஸ் பானங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பானங்களோ அல்லது கடினமாக தயாரிக்கப்பட வேண்டிய பானங்களோ அல்ல. மிகவும் எளிதாக வீட்டிலேயே, மிகக் குறைந்த செலவில் தயாரித்து பலனை பெறலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெயிட் லாஸ் பானங்களை, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதால் சிறந்த பலனை பெறலாம். முக்கியமாக காபி டீ அருந்துவதற்கு பதிலாக இந்த வெயிட் லாஸ் பானங்களை அருந்துவதை வழக்கமாகக் கொண்டால், நிச்சயம் பலன் (Health Tips) இருக்கும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீரில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வெறும் வயிற்றில் இந்த பானத்தை உட்கொள்வதால், உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி, செரிமானம் மேம்படும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், அரை எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும். அதிக கலோரிகள் எரிக்கப்படும்.

சீரக நீர்

அகத்தை சீர் செய்யும் ஆற்றல் கொண்ட சீரகம், அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலாக்களில் ஒன்று. சீரக நீர் செரிமான நொதிகளை தூண்டி, வாயு, மலச்சிக்கல், ஆசிடிட்டி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் சீரக நீர், வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் சிறந்த பானமாக இருக்கும். ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை சிறிது சூடாக்கி அருந்தலாம். அல்லது காலை வெதுவெதுப்பான நீரில், வறுத்து பொடி செய்த சீரக பொடியை கலந்து அருந்தலாம்.

இலவங்கப்பட்டை நீர்

இலவங்கபட்டை கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட மிகச்சிறந்த மசாலாக்களில் ஒன்று. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்ட இந்த மசாலா மிகவும் உதவும். அதோடு இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் பெரிதும் உதவும். கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும். உடல் பருமன் குறைய காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் அருந்துவது நல்ல பலன் தரும். லவங்கப்பட்டை அல்லது அதன் தூளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடிப்பது நல்லது.

நெல்லிக்காய் ஜூஸ்

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. சுமார் 100 நோய்களை தீர்க்கும் அருமருந்து என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். இது வளர்ச்சியை மாற்றத்தை தூண்ட உதவுவதோடு, உடலை டிடாக் செய்யும் சிறந்த பானமாக இருக்கும். இரண்டு நெல்லிக்காய்களை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள வெயிட் லாஸ் பானங்கள், உடல் எடை குறைய பெரிதும் உதவும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அதனுடன், ஆரோக்கியமான உணவு பழக்கமும், வாரத்திற்கு ஐந்து நாளாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கமும் கடைபிடிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News