மெட்டபாலிசத்தை தூண்டி... தொப்பை கொழுப்பை வெண்ணெய் போல் கரைக்கும்... சிறந்த பானங்கள்

Weight Loss Drinks: ஆரோக்கிய பானங்கள் சில, மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2025, 04:37 PM IST
  • அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை சட்டென குறைய உதவும் பானங்கள்.
  • கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை தூண்டுகின்றன.
  • சீரகம், உடலில் சேர்ந்து உள்ள துர்நீர் அனைத்தையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
மெட்டபாலிசத்தை தூண்டி... தொப்பை கொழுப்பை வெண்ணெய் போல் கரைக்கும்... சிறந்த பானங்கள்

உடல் எடையை குறைப்பதில் டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில ஆரோக்கிய பானங்கள், உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகின்றன. இவை உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் கொழுப்பையும் தொப்பை கொழுப்பையும் விரைவாக கரைக்கும் சிறந்த பானங்களை பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

சிறந்த வெயிட் லாஸ் பானங்கள்

உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள், செரிமானத்தை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை (Health Tips) சட்டென குறையும்.

இஞ்சி எலுமிச்சை நீர்

எலுமிச்சையில் உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் வைட்டமின் சி யும் உள்ளது. இஞ்சி மெட்டபாலிசத்தை தூண்டும் சிறந்த மசாலா வகைகளில் ஒன்று. காலையில் நன்றாக துருவிய இஞ்சி சேர்த்து சிறிது கொதிக்க வைத்த நீரில், எலுமிச்சைச் சாறு பிழிந்து, சுவைக்காக தேன் கலந்து அருந்தி வந்தால், உடல் எடையை சிறப்பாக குறைக்கலாம். இதனை வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலன் தரும்.

நீர்மோர்

செரிமானத்தை மேம்படுத்தும் அற்புத பானமான நீர்மோர் ரோபோ பயோடிக் பண்புகள் நிறைந்தது. செரிமானத்தை மேம்படுத்தும் அற்புத பானமான இதை, உணவுக்கு பின் அருந்தினால், செரிமானம் சிறப்பாக இருக்கும். உடல் எடையை குறைக்க செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லிக்காய் ஜூஸ்

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால், உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் என்னும் அருமருந்து, உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இளநீர் அல்லது தேங்காய் நீர்

தேங்காய் நீர் அல்லது இளநீரில் எண்ணற்ற எலெக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, உடலுக்கு ஆற்றலையும் அள்ளி வழங்குகின்றன. செரிமானத்தையும் மேம்படுத்தும் என்பதால், இதனை சிறந்த வெயிட் லாஸ் ட்ரிங்க் எனலாம்.

சீரக நீர்

அகத்தை சீர் செய்யும் சீரகம், உடலில் சேர்ந்து உள்ள துர்நீர் அனைத்தையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. மெட்டபாலிசத்தை தூண்டும் மிகச்சிறந்த பானமான சீரக நீர், உப்பை கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும். எலுமிச்சை இஞ்சி நீரை போலவே, இதனையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது சிறந்த பலனை கொடுக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை தூண்டுகின்றன. இதனை அருந்துவதால் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, உடலும் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பு சிறப்பாக கரைக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட பானங்களை குடிப்பதால் மட்டும் எடை குறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சிறிதளவு உட்கொள்ள வேண்டும். அதற்காக கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்தை முற்றிலுமாக தவிர்ப்பதும் ஆபத்து என்பதை நினைவில் கொள்ளவும்.

சீரான டயட், ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வெயிட் லாஸ் பானங்கள், உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து வந்தால், உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் நிச்சயம் கரைக்கலாம். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாம்பழ பிரியர்கள் கவனத்திற்கு... மாம்பழத்துடன் சாப்பிட கூடாத சில உணவுகள்...

மேலும் படிக்க |இந்தியாவில் ஆண்களுக்கு அதிகம் வரும் டாப் 5 கேன்சர்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News