COVID-19 தடுப்பூசி பரிசோதனையில் பாதகமான நிகழ்வா.. Bharat Biotech கூறுவது என்ன..!!
ஆகஸ்ட் மாதம் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது ஏற்பட்ட பாதகமான சம்பவத்தை தெரிவிக்கவில்லை என்ற செய்திகளை பாரத் பயோடெக் நிராகரித்துள்ளது
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் ஆகஸ்ட் மாதம் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது ஏற்பட்ட பாதகமான சம்பவத்தை தெரிவிக்கவில்லை என்ற செய்திகளை நிராகரித்துள்ளது, மேலும் இந்த பரிசோதனையில் ஏற்பட்ட பாதகமான சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் நிறுவனம் அது குறித்து தகவல் அளித்ததாகவும் கூறினார்.
சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில், பாரத் பயோடெக் (Bharat Biotech) , "ஆகஸ்ட் 2020 இல் முதலாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது ஏற்பட்ட பாதகமான நிகழ்வு குறித்து, அது நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் சி.டி.எஸ்.கோ-டி.சி.ஜி.ஐக்கு (CDSCO-DCGI) தெரிவிக்கப்பட்டது." என்று கூறியது.
பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் (ICMR) ஆகியவை கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான உள்நாட்டு தயாரிப்பில் ஒன்றான கோவாக்சின் மருந்து தயாரிப்பில் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் -19 தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளைத் தொடங்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பாரத் பயோடெக்கிற்கு (Bharat Biotech) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நடந்து கொண்டிருந்த முதலாம் கட்ட சோதனைகளின் போது ஏற்பட்ட பாதகமான நிகழ்வு குறித்து பாரத் பயோடெக் தெரிவிக்கவில்லை என்று ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மருந்து நிறுவனம், சனிக்கிழமை (நவம்பர் 21) இந்த சம்பவத்தை உறுதிசெய்து தெளிவுபடுத்தியது. பாதகமான சம்பவம் முழுமையாக ஆராயப்பட்டது என்றூம் பாதகமான நிகழ்வு தடுப்பூசிக்கு சம்பந்தமில்லை என்பதும் கண்டறியப்பட்டது என பாரத் பயோடெக் கூறியுள்ளது.
ALSO READ | கொரோனா பல மாதங்களுக்கு உடலில் இருக்குமாம்... பீதியை கிளப்பும் மருத்துவர்கள்..!!!
மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பாதகமான நிகழ்வுகளையும், நெறிமுறைகள் குழு, CDSCO-DCGI, தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் மற்றும் ஸ்பான்சர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கோவ்சைனின் (covaxin) மருத்துவ பரிசோதனைகள் தற்போது பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியோரால் நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன.
இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், பாதகமான நிகழ்வு முழுமையாக விசாரிக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் CDSCO-DCGI-விடம் சமர்பிக்கப்பட்டது என பாரத் பயோடெட் கூறியுள்ளது.
“பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் மீது நடத்தும் சவாலான ஆய்வுகளை மேற்கொண்ட சில நிறுவனங்களில் பாரத் பயோடெக் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மருத்துவ பரிசோதனைகளையும் நடத்துகிறது. பாரத் பயோடெக் 80 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 4 பில்லியனுக்கும் அதிகமான மருந்து டோஸ்களை வழங்கியுள்ளது, தடுப்பூசி ஆராய்ச்சியின் போது, மிக பாதுகாப்பான வழிமுறைகளை கையாள்கிறது எனறஃ பெயரை எடுத்துள்ளது பாரத் பயோ டெக் நிறுவனம் ”என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
ALSO READ | 2021 CBSE பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா... தேதிகளின் அறிவிப்பு விரைவில்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR