Benefits of Curry Leaves: இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், தினமும் காலையில் கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுபவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும், இதனால் ஏற்படக்கூடிய நேர்மறையான விளைவுகள் பற்றியும் கூறுகிறார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Health Benefits of Curry Leaves: உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, பெரிய பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய செயல்களும், மாற்றங்களுமே நம் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும். நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், நாளை ஆரோக்கியமான முறையில் தொடங்க வேண்டும்.
காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தை பன்மடங்கு மேம்படுத்துகின்றன. அப்படிப்பட்ட உணவுகளில் கறிவேப்பிலையும் ஒன்று. காலையில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம். தென்னிந்திய உணவுகள் பெரும்பாலானவற்றில் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், தினமும் காலையில் கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுபவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும், இதனால் ஏற்படக்கூடிய நேர்மறையான விளைவுகள் பற்றியும் கூறுகிறார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. Digestion: செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடும்போது செரிமான நொதிகள் தூண்டப்பட்டு குடல் இயக்கத்தை எளிதாக்குகின்றன. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.
2. Morning Sickness: காலையில் ஏற்படும் பிரச்சனைகளில் நிவாரணம்
பலர் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் வாந்தி சங்கடம் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட்டால், செரிமானம் சிறப்பாக இருக்கும். மேலும் காலை சுகவீனத்திற்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.
3. Weight Loss: எடை இழப்பு
உடல் பருமன் பிரச்சனையால் அவதியில் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் அது எடையைக் குறைக்க உதவுகிறது. உடலின் உள்ள நச்சுகளை நீக்க இது பெரிய அளவில் உதவுகிறது. மேலும் கொழுப்பின் அளவையும் இதன் மூலம் குறைக்கலாம். தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்க விரும்பும் நபர்களுக்கு கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. Hair Care: கூந்தலுக்கு நன்மை அளிக்கும்
கறிவேப்பிலை முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவுகிறது. காலையில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு, சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இலைகளை சரியாக மென்று சாப்பிட வேண்டும். மேலும், இதை சாப்பிட்டு குறைந்தது 30 நிமிடங்களுக்கு பிறகு காலை உணவை உட்கொள்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ