Weight Loss Journey: பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தமிழ்நாட்டில் பிரபலமடைவதற்கு முன்னரே, இந்தியில் பெரியளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தியில் பிக்பாஸ் 18 சீசன் வரை வந்துள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் 18வது சீசனில் பங்கேற்ற ஷில்பா ஷிரோத்கர் என்பவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார்.
Weight Loss Journey: 13 கிலோ உடல் எடையை குறைத்த பிரபலம்
இவர் நிகழ்ச்சி முடிந்து குறுகிய காலத்திலேயே 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவர் தற்போது உடல் எடையை குறைந்து காணப்படுவது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் பருமன் காரணமாக தான் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பகை பல தருணங்களில் ஷில்பா வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில், அவர் உடல் பருமன் பிரச்னையில் இருந்து தற்போது உடல் எடையை குறைத்திருப்பது அவரது மனவலிமையையும், உறுதியையும் வெளிக்காட்டுகிறது.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க உதவிய பிக்பாஸ்
அவர் உடல் பருமனுடன் இருந்த புகைப்படத்தையும், தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் அவரே பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பெற்ற அனுபவங்கள் மூலம் மூன்னேற்றமடைந்து, பல பாடங்களை கற்று, இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அளவான உணவே கிடைக்கும் என்பதால், அந்த நிகழ்ச்சியும் அவரது உடல் எடை குறைப்புக்கு முதன்மையான காரணமாக இருந்துள்ளது.
பிக்பாஸில் இருந்த காலகட்டத்தில் அவர் சுமார் 11 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இருப்பினும் நிகழ்ச்சி முடிந்து அவர் வெளிவந்ததும் 2 கிலோ எடை அதிகரித்துவிட்டாராம். அதன்பின்னர், வெளியே வந்த பின்னரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு மொத்தம் 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். அவருடன் பிக்பாஸ் சீசன் 18இல் இருந்த சக போட்டியாளரான அவினாஷ் மிஸ்ராவே ஷில்பாவின் உடல் எடை குறைப்பு பயணத்திற்கு ஊக்கமளித்துள்ளாராம்.
Weight Loss Journey: உடல் பருமனால் இழந்த பெரிய வாய்ப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அவினாஷ் பிக்பாஸில் ஜெயிலுக்கு சென்றபோது, எங்களுக்கு குறைவான உணவே கிடைத்தது. அப்போது அனைவரின் உடல் எடையும் குறைய தொடங்கியது" என்றார். இதன்பின்னரே, உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அவருக்கு தோன்றியதாம்.
உடல் எடையை குறைத்த பின்னர், அவர் உடல் பருமனுடன் இருந்த காலகட்டத்தில் தவறவிட்ட பல வாய்ப்புகளை அவர் நினைவுக்கூர்ந்தார். முன்னர், ஷாருக்கானின் மிக பிரபலமான சாய்யா, சாய்யா பாட்டுக்கு அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாம், ஆனால் 15 நாள்களில் உடல் எடையை குறைக்க வேண்டியிருந்ததால் அது முடியாத காரணத்தால் வாய்ப்பு பறிபோனதாக அவர் கூறினார். இருப்பினும், அதுகுறித்து தனக்கு வருத்தம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: ஷில்பா ஒரு உதாரணம்
உடல் எடை குறைப்புக்கு குடும்பத்தினரும் உதவிக்கரமாக இருந்ததாகவும், பலரும் தனது எடை இழப்பை பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர். மேலும், ஆரோக்கியமான முறையிலும், நீண்ட கால நோக்கிலும் உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஷில்பாவின் இந்த உடல் எடையை குறைப்பு அனுபவம் என்பது வெறும் தோற்றம் குறித்து மட்டுமில்லை, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, சுய அன்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. அவரது உடல் எடை குறைப்பு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இருந்துள்ளது. மேலும் உறுதிப்பாடு, ஒழுக்கம், நேர்மறையான அணுகுமுறையுடன் இருந்தால் எந்த வயதிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதற்கு ஷில்பா ஒரு உதாரணமாக உள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஷில்பா ஷிரோத்கரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 36 கிலோவை கரைத்த பெண்; பிடிச்ச உணவுகளை சாப்பிட்டே எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 2 குழந்தைகளின் தாய்... உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 34 கிலோவை குறைத்த 26 வயது இளைஞன்! கொழுப்பை குறைக்க உதவிய டயட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









