இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கீல்வாதம் - மூட்டு வலி பிரச்சனை... அறிகுறிகள் இவை தான்

மூட்டுவலி, கீல்வாதம் ஆகிய எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ற காலம் போய், இளைஞர்கள் கூட மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவர்களை அணுகும் காலம் வந்துவிட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2025, 10:55 AM IST
  • இளம் வயதிலேயே மூட்டுவலி ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள்
  • மூட்டுவலி அல்லது கீல்வாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்.
  • எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கீல்வாதம் - மூட்டு வலி பிரச்சனை... அறிகுறிகள் இவை தான்

மூட்டுவலி, கீல்வாதம் ஆகிய எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ற காலம் போய், இளைஞர்கள் கூட மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவர்களை அணுகும் காலம் வந்துவிட்டது. 65 வயதுக்குட்பட்ட மூன்றில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மூட்டுவலி இருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது. இந்தியாவிலும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

எலும்பியல் நிபுணர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

ரீஜென் ஆர்த்தோஸ்போர்ட்டின் (Regen Orthosport) நிறுவனரும் எலும்பியல் நிபுணருமான (Regenerative Orthopedic specialist) டாக்டர் வெங்கடேஷ் மோவா, ஒரு ஊடக அமைப்புடன் பேசுகையில், இப்போது இளம் வயதிலேயே மூட்டுவலி அறிகுறிகளை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறினார். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை (Health Tips) மற்றும் உணவுமுறை, மரபணு காரணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்கு காரணமாகின்றன. 

இளம் வயதிலேயே மூட்டுவலி ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள்

இளம் வயதிலேயே மூட்டுவலி ஏற்படுவதற்கு உடல் பருமன் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். எடை அதிகரிக்கும் போது, ​​முழங்கால்கள் மற்றும் இடுப்பு போன்ற மூட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது தவிர, மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கம், அதிகப்படியான திரை நேரம் மற்றும் உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை ஆகியவை தசை சமநிலையின்மை மற்றும் விறைப்பை அதிகரிக்கும். மேலும், சுளுக்கு அல்லது தசைநார் பிரச்சனை போன்ற காயத்திற்குப் பிறகு சரியான சிகிச்சை பெறாதது பின்னர் காலப்போக்கில் மூட்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், முடக்கு வாதம் அல்லது சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள், குடும்பத்தில் மூட்டுவலி வரலாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் இந்த நோயை அதிகரிக்கச் செய்யும்.

மூட்டுவலி அல்லது கீல்வாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

1. காலையில் எழுந்தவுடன் விறைப்பு: காலையில் எழுந்த பிறகும் மூட்டுகளில் விறைப்பு நீடித்தால், அது சாதாரணமானது அல்ல.

2. மூட்டுகளில் வீக்கம் அல்லது சூடு: மூட்டுகள் வீங்கினாலோ அல்லது தொடும்போது சூடு இருப்பதாக உணர்ந்தாலோ, அது வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

3. நடக்கும்போது வலி: படிக்கட்டுகளில் ஏறும்போது கால்களிலோ அல்லது எதையாவது பிடித்துக் கொள்ளும்போதோ கைகளிலோ வலி ஏற்படுவது மூட்டுகளில் பலவீனத்தின் அறிகுறியாகும்.

4. சோர்வு அல்லது லேசான காய்ச்சல்: சோர்வு, காய்ச்சல் அல்லது எடை இழப்பு கூட ஏற்படலாம், குறிப்பாக ஆட்டோ இம்யூன் ஆர்த்ரிடிஸில்.

5. மூட்டுகளின் இயக்கத்தில் சிரமம்: மூட்டுகளை முழுமையாக வளைப்பதில் அல்லது நேராக்குவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. குருத்தெலும்பு சேதம் அல்லது வீக்கம் காரணமாக இருக்கலாம்.

கீல்வாத சிகிச்சை

பெரும்பாலும் இளைஞர்கள் எமும்புகளின் பலவீனத்தை உணர்த்தும் மேற்கண்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் ஆரம்பகால சிகிச்சையைப் பெறாதது மூட்டுகளின் நிலையை மோசமாக்கும் என்பதோடு, சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று டாக்டர் மோவ்வா கூறுகிறார். கீல்வாதத்திற்கு உறுதியான சிகிச்சை இல்லை என்றாலும், அதன் அறிகுறிகளை மருந்துகள், பிசியோதெரபி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இளமையை காக்கும் கொலாஜன் என்னும் புரதம்... உடலில் குறையாமல் இருக்க செய்ய வேண்டியவை

மேலும் படிக்க | 145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News