பார்டர்லைன் டயாபெட்டிஸ் (Prediabetes): உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள்..!

Prediabetes Health Tips : பார்டர்லைன் டயாபெட்டிஸ் என்றால் என்ன? அது வருவதற்கு முன்பு உடல் காட்டும் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இங்கே விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 28, 2025, 01:06 PM IST
  • பார்டர்லைன் நீரிழிவு நோய் என்றால் என்ன?
  • நீரிழிவு நோய் வருவதற்கு முன்னர் காட்டும் அறிகுறிகள்
  • நீரிழிவு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பார்டர்லைன் டயாபெட்டிஸ் (Prediabetes): உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள்..!

Prediabetes : டயாபெட்டிஸ், அதாவது நீரிழிவு நோய், சர்க்கரை நோய் என பல விதமாக அழைக்கப்படும் இது ஒரு வாழ்நாள் நோயாகும். ஒருமுறை வந்துவிட்டால் இறக்கும் வரை குணப்படுத்த முடியாது. இதில் பல நிலைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பார்டர்லைன் டயாபெட்டிஸ். பார்டர்லைன் டயாபெட்டிஸ் (Prediabetes) என்பது டைப் 2 டயாபெட்டிஸ் வருவதற்கு முன்னர் தோன்றும் ஒரு நிலை. இதில் இரத்த சர்க்கரை அளவு சாதாரணத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் டயாபெட்டிஸ் என வகைப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமாக இருக்காது. இந்த நிலையை "எச்சரிக்கை சமிக்ஞை" எனக் கருதி, உடனடியாக lifestyle changes எடுக்காவிட்டால், முழுமையான டயாபெட்டிஸ் வர வாய்ப்பு உள்ளது.

Add Zee News as a Preferred Source

பார்டர்லைன் டயாபெட்டிஸின் அறிகுறிகள்:

தொடர்ச்சியான தாகம் & அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொழுப்பு அதிகரிப்பு (குறிப்பாக வயிற்றுப் பகுதியில்), தொடர்ந்து களைப்பு அல்லது ஆற்றல் இழப்பு, கழுத்து, கைகளின் மடிப்புகளில் தோல் கருமையாதல், காயங்கள் மெதுவாக ஆறுதல், பார்வை மங்கலாக இருத்தல் ஆகியவை முக்கியமான காரணங்களாகும்.

பார்டர்லைன் டயாபெட்டிஸ் ஏன் வருகிறது?

இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance): உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலை. பாங்கிரியாஸ் (கணையம்) போதுமான இன்சுலின் தயாரிக்காமல் இருப்பதால் வருவது ஆகும். உணவில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு ஆகியவை இருப்பதை உண்பதாலும் வரும்.

யாருக்கு இந்த பாதிப்பு அதிகம் வரும் (Risk Factors):

- உடல் எடை அதிகரிப்பு (BMI > 25)
- உடல் செயலற்ற தன்மை (வழக்கத்திற்கு குறைவான உடல் பயிற்சி)
- உயர் ரத்த அழுத்தம் (High BP)
- கொலஸ்ட்ரால் அதிகரிப்பு
- குடும்பத்தில் டயாபெட்டிஸ் வரலாறு
- 4 கிலோவுக்கு மேல் பிறந்த குழந்தை பெற்றவர்களுக்கு வரும்

பார்டர்லைன் டயாபெட்டிஸ் இருந்தால் என்ன ஆகும்?

இந்த நிலையை கவனிக்காமல் விட்டுவிட்டால், பின்வரும் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்:
- கண்பார்வை பாதிப்பு (Diabetic Retinopathy)
- நரம்பு சேதம் (Neuropathy - கால்/கை உணர்வு இழப்பு)
- சிறுநீரக செயலிழப்பு (Kidney Damage)
- இதய நோய்கள் (Heart Disease & Stroke)

தடுப்பு முறைகள்:

- உடல் எடையை குறைக்கவும் (குறைந்தது 5-7% எடை குறைப்பு)
- நாளுக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி (நடைபயிற்சி, யோகா, ஜிம்மில்)
- சீரான உணவு (அதிக நார்ச்சத்து, குறைந்த சர்க்கரை)
- ரத்த சர்க்கரை அளவை வழக்கமாக சோதித்தல்

எச்சரிக்கை: இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். Prediabetes நிலையில் தான் lifestyle changes மூலம் டயாபெட்டிஸை தடுக்க முடியும்!

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | சீரகம் மற்றும் ஓம நீர்: தினமும் இப்படி குடித்தால் போதும், அனைத்து பிரச்சனைகளுக்கும் குட்பை சொல்லலாம்

மேலும் படிக்க |  இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க... நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News