சுரைக்காய் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். ஆனால் பாகற்காய்க்கு அடுத்தபடியாக பலர் விரும்பாத காய்கறிகளில், சுரைக்காய் ஒன்று. ஆனால் இதில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால், இதனை வாரத்துக்கு இருமுறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் ஏற்படும்.
சுரைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சுரைக்காயில் 96 சதவீத நீர்ச்சத்து உள்ளது. அதோடு இதில் நார்ச்சத்துடன், வைட்டமின் சி, வைட்டமின் பி, துத்தநாகம், தயாமின் இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் பல நிறைந்துள்ளன. கொழுப்பு என்பது மிக மிகக் குறைவு. 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் வியக்கத்தக்க நன்மைகள்
1. சுரைக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் இருப்பதால், மூலநோய், வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் எளிதில் ஜீரணமாகும் என்பதால், அனைவரும் சாப்பிடக்கூடிய சிறந்த காய்கறியாக இருக்கும்.
2. எடை இழப்பிற்கு உகந்த சிறந்த காய்கறிகளில் சுரைக்காய் அடங்கும். இது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதால், பருமனை குறைக்க பெரிதும் உதவும். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், பசியை கட்டுப்படுத்தி தொப்பை கொழுப்பை எளிதாக கரைக்கலாம்.
3. சுரைக்காயில் 96 சதவீத நீர்ச்சத்து இருப்பதால், உடலில் சோர்வு ஏற்படாமல் பாதுகாப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
4. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், மூட்டு வலியை போக்கி, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதோடு இதில் உள்ள தாமிரம், துத்தநாகம், மாங்கனிசு போன்ற கனிமங்கள்,
5. சுரைக்காயில் காணப்படும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதோடு இதற்கு கொலஸ்ட்ராலை இருக்கும் திறன் உள்ளதால், மாரடைப்பு அபாயம் பெரிதளவு குறையும்.
6. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளில் சுரைக்காயை முதலில் வைக்கலாம். பாகற்காய்க்கு அடுத்தபடியாக, சுரைக்காய் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்தும், மிகக் குறைந்த கலோரி அளவும், சுகர் லெவலை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
7. சுரைக்காய் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற அற்புத உணவாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, போலிக் அமிலம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை தாயையும் கருவையும் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும், ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பார்க்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









