ஆயுர்வேத பொருட்கள் ரசாயன தயாரிப்புகளுக்கு சிறந்த மாற்றாக இருக்குமா..!!!

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் நச்சுகள் நிறைந்த தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2021, 04:34 PM IST
  • தொற்றுநோய் பரவல் இருக்கும் இந்த கால கட்டத்தில், மக்கள் ஆயுர்வேதத்தின் சிறப்பை நன்றாக உணர்ந்துள்ளனர்.
  • 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தீர்வுகளுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது.
  • தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய காலகட்டத்திலும் ஆயுர்வேதத்தின் பின்னால் மக்கள் அணிவகுக்கின்றனர்
ஆயுர்வேத பொருட்கள் ரசாயன தயாரிப்புகளுக்கு சிறந்த மாற்றாக இருக்குமா..!!!

ஆயுர்வேதம் (Ayurveda) என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ள நிலையில், இரசாயன அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு சிறந்த மாற்றாக ஆயுர்வேத பொருட்கள் விளங்குமா என்பது குறித்த நிபுணர்களின் கருத்து என்ன என்பதைப் பார்க்கலாம். 

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் நச்சுகள் நிறைந்த தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் (Chemical Products) சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. கேசத்திற்கான எண்ணெய், சோப்பு, ஷாம்பு, கிரீம் லோஷன், தலைமுடி நிறங்கள் அல்லது கண்டிஷனர்கள் ஆகியவற்றில், சல்பேட்ஸ், பாராபென்ஸ், பாலிஎதிலீன் கிளைகோல்ஸ் போன்ற பல வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது, தீங்கு விளைவிக்கும். 

இதற்கான தீர்வு இயற்கையுடன் இணைந்த ஆயுர்வேதத்தில் உள்ளது. ஆயுர்வேத தயாரிப்புகள், மூலிகைகள், தாவர சாறுகள் போன்ற இயற்கை பொருட்களுடன் தயாரிக்கப்படுவதால், அவை நிச்சயம் தீங்கு விளைவிப்பதில்லை. ஆலு வேரா, நெல்லிக்காய், செம்பருத்தி, கேரட் வேரில் சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை பொருட்களை கொண்டு அழகு பராமரிப்புக்கான ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்

தொற்று நோய் பரவல் இருக்கும் இந்த கால கட்டத்தில், மக்கள் ஆயுர்வேதத்தின் சிறப்பை நன்றாக உணர்ந்துள்ளனர். தீங்கு விளைவிக்கும் ரசாயனம் நிறைந்த தயாரிப்புகளை தவிர்த்து இப்போது ஆயுர்வேத பொருட்களை நாடுகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத மற்றும் இயற்கை தீர்வுகளுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர புதிதாக கொலம்பியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளும் ஆயுர்வேத பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளன.

தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய காலகட்டத்திலும் ஆயுர்வேதம் பின்னால் மக்கள் அணிவகுப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இந்த அதன் பழமையான மருத்துவ அறிவியல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை வழங்கு அதன் தன்மை ஆகியவை என்றால் மிகை ஆகாது. 

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News