நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இவர்கள் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
Diabetes Control Tips: நீரிழிவு நோயால் பாதிக்கப்படுள்ளவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. இந்த நோய், மோசமான வாழ்க்கை முறை அல்லது மரபணு காரணங்களால் ஏற்படலாம். உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவதால் சர்க்கரை நோய் வரலாம். உயர் இரத்த சர்க்கரை அளவு இருப்பவர்கள் தங்கள் உணவு முறையில் பல மாற்றங்களை செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இவர்கள் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. ஆனால், அதற்கு பதிலாக பலர் தேன் அல்லது வெல்லம் அதிக நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். எனினும், நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்ற கேள்வியும் பலரிடம் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெல்லம் இயற்கை சர்க்கரையாக பார்க்கப்படுகின்றது
வெள்ளை சர்க்கரையை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு இது உகந்ததாக கருதப்படுவதில்லை. வெள்ளைச் சர்க்கரை மனநல பலவீனம் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். சுகாதார நிபுணர்கள் முதல் உணவியல் நிபுணர்கள் வரை, மக்கள் வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, தேன் அல்லது வெல்லம் போன்ற இயற்கை சர்க்கரையை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், இந்த இரண்டு இயற்கை இனிப்புகளும் ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படலாம். ஆனால் அவையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா?
சுகர் நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவது நல்லதல்ல. மருத்துவரின் ஆலோசனையின்றி வெல்லம் சாப்பிடவே கூடாது. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் மற்றும் தேன் ஆரோக்கியமான விருப்பமாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இவையும் நல்லதல்ல. நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிட வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் இது சர்க்கரையைப் போலவே தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை சாறு: இப்படி குடித்தால் அதிக பலன்
இயற்கை மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரையின் விளைவு என்ன?
நாமாக உட்கொள்ளும் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, இயற்கை சர்க்கரையின் மீது மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். தேன், வெல்லம் அல்லது பழங்கள் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட இயற்கை சர்க்கரை சிறந்தது என்று கூறப்படுகின்றது.
சந்தையில் கிடைக்கும் தேன் மற்றும் வெல்லத்தில் கலப்படம் இருக்கலாம். ஆனால் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையை உட்கொள்வது உடலில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. இதில் அதிக நார்ச்சத்து மற்றும் பிற கூறுகளுடன் குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. இது தேவைக்கேற்ப உடலில் சர்க்கரையின் வேலையை செய்யும்.
வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது நல்லதல்ல என கருதப்படலாம். ஆனால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவது நல்லதாக கருதப்படுகிறது. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுவது நல்லது. வெல்லம் சாப்பிடுதால், தூக்கம், செரிமானம், வயிறு தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக எடை உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 100 கிராம் வெல்லத்தில் சுமார் 385 கலோரிகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவது சரியல்ல. ஏனெனில் அது இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. அஜீரணம் மற்றும் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களும் வெல்லம் சாப்பிடுவது நல்லதல்ல.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அவித்த முட்டையா... ஆம்லேட்டா... காலை உணவில் எதை சாப்பிடலாம்? எதில் அதிக நன்மை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ