)
Fatty Liver: கொழுப்பு கல்லீரல் என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு நோயாக உள்ளது. இது உலகம் முழுவதும் பரவலாக பரவி வருகிறது. இதில், கல்லீரலில் கொழுப்பு படிந்து, இந்த உறுப்பின் செயல்பாடு குறைகிறது. பல நேரங்களில், கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
கல்லீரல் என்பது நமது உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. இது மற்ற அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. கல்லீரலின் உதவியுடன், உணவு செரிக்கப்படுகிறது. இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதாவது, நாம் நோய்களைத் தவிர்க்க விரும்பினால், நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
- கல்லீரல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அது அனைத்து முக்கிய நோய்களுக்கும் மூலமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
- இந்த ஒரு உறுப்பை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்கவில்லை என்றால், அது இதயம், சிறுநீரகம், இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம்.
- கல்லீரல் நோய் மறைமுகமாக மாரடைப்புடனும் தொடர்பு கொண்டுள்ளது.
கல்லீரலும் மாரடைப்பும்: தொடர்பு என்ன?
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதா? இது ஏன் நடக்கிறது?
- கொழுப்பு கல்லீரல் ஏற்பட்டால், உணவை சரியாக ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது.
- கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பதால், அதன் செயல்பாடு மோசமடைகிறது.
- இதுபோன்ற சூழ்நிலையில், உடலுக்குள் கெட்ட கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது.
- கெட்ட கொழுப்பின் அதிகரிப்பு காரணமாக, இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.
- இந்த அடைப்பு மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
- கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கும் மாரடைப்புக்கும் சில பொதுவான அறிகுறிகளும் உள்ளன.
- உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு போன்றவை இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் பொதுவான அறிகுறிகள்.
இதை தடுப்பது எப்படி?
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் குறைக்க மருத்துவர்கள் சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர்:
எடை இழப்பு: உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் எடையை பராமரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் உயரம் 170 என்றால், அதிலிருந்து 100 ஐக் கழிக்கவும். அதாவது உங்கள் எடை சுமார் 70 ஆக இருக்க வேண்டும். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மரபணு ரீதியாக இருந்தால், எடை 65 கிலோவாக இருக்க வேண்டும். குறிப்பாக இடுப்புப் பகுதி, வயிற்றுப்பகுதி ஆகிய இடங்களில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மருக்கள் மற்றும் கருப்பு கோடுகள்: கழுத்துக்கு அருகில் மருக்கள் மற்றும் கருப்பு கோடுகள் இருந்தால், அவற்றையும் கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
நெய்: உங்கள் உணவில் பல்வேறு வகையான எண்ணெய்களுக்கு பதிலாக பசு நெய்யைப் பயன்படுத்தலாம். சுத்தமான மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய் சாப்பிடுவது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
கல்லீரலை பாதுகாக்க இவற்றை செய்யக்கூடாது:
- வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- சர்க்கரை மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.
- நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- குடும்பத்தில் இந்த பிரச்சனை இருந்தால், அவ்வப்போது உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பு கல்லீரலின் சில அறிகுறிகள்
- சோர்வு
- வயிற்றின் மேல் வலது பகுதியில் வலி
- வலி மற்றும் அசௌகரியம்
- எடை இழப்பு
- வயிற்றில் வீக்கம்
- தோலில் அரிப்பு மற்றும் பாதங்களில் வீக்கம்
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ