Neem leaves Prevent Diabetes : நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் ஹார்மோன் சரியாக செயல்படாததால் ரத்தத்தில் சர்க்கரை அளவு (Blood Glucose) அதிகரிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். இது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டைப் 1 நீரிழிவு (Type 1 Diabetes), டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes – 90% நோயாளிகள்), கர்ப்ப கால நீரிழிவு (Gestational Diabetes) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. டைப் 1 நீரிழிவு நோய் என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு (Autoimmune Response) தன்னுடைய கணையத்தின் பீட்டா செல்களை அழிக்கிறது. இதனால், இன்சுலின் உற்பத்தி நிற்கிறது. பொதுவாக குழந்தைகள்/இளம் வயதினருக்கு இந்த பிரச்சனை வரும்.
டைப் 2 நீரிழிவு நோய் என்பது இன்சுலின் தடை (Insulin Resistance), அதாவது உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாதபோது வருவது ஆகும். உடல் பருமன் (Obesity), தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை, பரம்பரையாக குடும்பத்தில் நீரிழிவு இருந்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் தடையை ஏற்படுத்துவதால் வருவது ஆகும். சரி, வேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். வேப்பிலை பாரம்பரிய மருத்துவத்தில் ரத்த சர்க்கரை (Blood Sugar) கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது முழுமையான நீரிழிவு (Diabetes) நோய்க்கு தீர்வா? என்பதை இங்கே பார்க்கலாம்
1. வேப்பிலையின் சர்க்கரை குறைக்கும் திறன்
வேப்பிலையில் உள்ள நிம்போலிட், நிம்பினால் போன்ற சேர்மங்கள் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இது, ரத்தத்தில் குளுக்கோஸ் ஸ்பைக் தடுக்கப்படுகிறது. மேலும், கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 2011-ல் "Journal of Ethnopharmacology" ஆய்வில், வேப்பிலை தூள் (1-3g/நாள்) 30 நாட்கள் சாப்பிட்ட நீரிழிவு நோயாளிகளில் ரத்த சர்க்கரை 18-29% குறைந்தது என கூறுகிறது. 2017-ல் "Asian Pacific Journal of Tropical Biomedicine" ஆய்வு, வேப்பிலை எண்ணெய் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கிறது என கூறுகிறது.
2. நீரிழிவு தடுப்பில் வேப்பிலை – எப்படி உபயோகிப்பது?
3-5 வேப்பிலைகளை உலர்த்தி பொடி செய்து, காலையில் வெந்நீரில் கலந்து குடிக்கவும். 10-15 இலைகளை அரைத்து, சாறு எடுத்து தேன் சேர்த்து குடிக்கவும்.
முக்கிய எச்சரிக்கை:
அதிகம் சாப்பிடக்கூடாது. வேப்பிலையில் கொயினா எனும் வேதிப்பொருள் அதிகமாகினால் லிவர் பிரச்சனை ஏற்படலாம். இரத்தம் மெல்லியாக்கும் மருந்துகள் (Blood Thinners) எடுப்பவர்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
3. வேப்பிலை மட்டும் போதுமா?
இல்லை. வேப்பிலை ரத்த சர்க்கரையை குறைக்க உதவும், ஆனால் மட்டும் நீரிழிவை முழுமையாக கட்டுப்படுத்த போதாது. இவற்றுடன் குறைந்த GI உணவுகள் கேழ்வரகு, பச்சை காய்கறிகள் எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்தக்கூடாது.
4. யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிகள், குறைந்த இரத்தச் சர்க்கரை (Hypoglycemia) உள்ளவர்கள், லிவர் பிரச்சனை உள்ளவர்கள் வேப்பிலை எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை டாக்டரின் ஆலோசனையுடன் மட்டும் பயன்படுத்துங்கள். வேப்பிலை ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும், ஆனால் இது முழுமையாக குணப்படுத்தாது. மருந்துகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நடிகைகள் எப்போதும் இளமையாக இருக்கக் காரணம் இதுதானா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









