Tea After Eating Meals : உலகில் உள்ள பல லட்சக்கணக்கானோருக்கு, பிடித்தமான பானமாக இருக்கிறது, டீ. இதனை தமிழில் ‘தேநீர்’ என குறிப்பிடுவர். காலையில் அல்லது மாலையில் ஒரு கப் தேனீருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே பால்கனியில் அமருவது நினைத்து பார்க்கும் போதே சொர்க்கம் போல இருக்கும். பலர், இதை குடிப்பதால் தனது உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் என நினைப்பர்.
தேநீர் குறித்து மருத்துவர்கள் கூறுவது..
நம்மில் பலருக்கு, காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிட்ட பின் தேநீர் குடிப்பது பழக்கமாக இருக்கும். எவ்வளவுதான் வயிறு முழுக்க சாப்பிட்டிருந்தாலும், டீ குடித்தால்தான் வயிறு முழுமையான உணர்வே வரும். தேநீர் என்னதான் அனைவருக்கும் பிடித்த பானமாக இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் பலர் சாப்பிட்ட பின்னர் அதை குடிப்பதை வன்மையாக கண்டிக்கின்றனர்.
அவர்கள் இப்படி, சாப்பிட்ட பின் டீ குடிக்க கூடாது என்று சொல்வதற்கு பின்னாலும் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதாவது, நாம் சாப்பிட்ட பின்பு தேநீர் குடிப்பதால் நாம் எடுத்துக்கொண்ட புரதம் வீணாகலாம் என்று கணிக்கப்படுகிறது. இதனால், நமக்கே தெரியாமல் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழுமாம்.
இரும்பு சத்தும்..தேநீரும்!
சாப்பிட்டபின் தேநீர் குடிப்பதற்கு மருத்துவர்கள் இவ்வளவு எதிராக இருக்க காரணம் அது நமது இரும்புச்சத்தை புரிந்து விடுவதால் தான் என்று கூறப்படுகிறது. அதாவது தேநீரில் டானின்கள் மற்றும் பாலிபீனால்கள் எனப்படும் இயற்கையான சேர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை பரப்பு வகைகள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் இரும்புச் சத்துடன் இருப்பை ஏற்படும் தன்மையுடையவை. செரிமான மண்டலத்தில் இது ஏற்படும் போது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் இரும்புச்சத்தை நம் உடல் உரிஞ்சுவதற்கு சிரமம் ஏற்படுகிறது.
நாட்கள் ஆக ஆக, இப்படி சாப்பிட்ட பின்பு தேநீர் குடிப்பதால் உடலில் இருக்கும் இரும்பு சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. இது குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சைவம் சாப்பிடுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது பெரும் அளவிளான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
செரிமானம்:
இரும்புச்சத்து உரிஞ்சுவதை தாண்டி, சாப்பிட்ட பின்பு டீ குடிப்பது, சாதாரணமாக நம் உடலில் ஏற்படும் செரிமானத்தை சீர்குலைக்க கூடும். டீயில் இருக்கும் Tannins மற்றும் டீ துகள்கள் நாம் சாப்பிடும் உணவை சரியாக உடைக்க விடாமல் போகலாம். இது, வயிறு உப்பசம், வாயு, அசிடிட்டி மற்றும் வயிறு கணமானது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.
எப்போது டீ குடிக்க வேண்டும்?
டீ குடிக்க வேண்டிய நேரத்தையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, சரியாக நாம் சாப்பிட்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து டீ குடிக்கலாம். இது, உங்கள் உடலுக்கு நீங்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைய நேரத்தை கொடுக்கிறது. அதன் பின்னர் நீங்கள் டீ குடிப்பதும், உங்கள் உடலுக்கு சரியானதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்! வெயிட்லாஸுக்கு எது நல்லது? மருத்துவர்கள் சொல்வது..
மேலும் படிக்க | பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன.. முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









