கார்போஹைட்ரேட்: வில்லனாக பார்க்காதீங்க... இவரும் ஹீரோ தான்... 5 நன்மைகள் இதோ

கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆபத்து எனவும், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர் கூறும் காரணங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2025, 12:58 PM IST
  • அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த உதவும் கார்போஹைட்ரேட்டுகள்.
  • உடல் கார்போஹைட்ரேட்டுகளை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது.
  • பிற ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்க உதவும் கார்போஹைட்ரேட்.
கார்போஹைட்ரேட்: வில்லனாக பார்க்காதீங்க... இவரும் ஹீரோ தான்... 5 நன்மைகள் இதோ

கார்போஹைட்ரேட் என்பது கொழுப்பைப் போல வில்லனாகக் காட்டப்படும் ஒரு ஊட்டச்சத்து. குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆபத்து எனவும், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர் கூறும் காரணங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

இந்தியாவின் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ் கார்போஹைட்ரேட் பற்றி கூறுகையில், கார்போஹைட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் (Health Tips) பற்றி கூறியுள்ளார். இந்த சத்து நமக்கு வில்லன் அல்ல, ஹீரோ தான் என்று சொல்லலாம்.

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு அவசியம் தேவை என்பதற்கான முக்கிய 5 காரணங்கள் (why Carbohydrates Are Necessary)

1. உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலைக் கொடுக்கும் ஊட்டச்சத்து

மூளை, தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு ஆற்றலை வழங்க உங்கள் உடல் பயன்படுத்தும் ஆற்றலின் முதன்மை ஆதாரம் கார்போஹைட்ரேட்டுகள். உங்கள் உணவில் சரியான கார்போஹைட்ரேட்டுகளை சேர்ப்பது உங்களை உற்சாகமாக இருக்க உதவும். மறுபுறம், குறைந்த கார்ப்போஹைட்ரேட் கொண்ட உணவை அதிகம் சாப்பிடுவது அல்லது கார்ப்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது, உங்களை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கும்.

2. அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த உதவும் கார்போஹைட்ரேட்டுகள்

உங்கள் இரத்த சர்க்கரை அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்தவும் கார்போஹைட்ரேட்டுகள் உதவுகிறது. போதுமான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளாததும் கூட பசியை உண்டாக்குகிறது. இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிட நேரிடலாம்.

3. பிற ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்க உதவும் கார்போஹைட்ரேட்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள். பெரும்பாலான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. எனவே, உங்கள் உணவில் இருந்து இந்த கார்போஹைட்ரேட் மூலங்களை நீக்குவது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடலாம், இது குறைபாடு நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

4. செரிமான ஆரோக்கியம்

உணவு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். நார்சத்து என்பதும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உங்கள் உடலுக்குத் தேவையான ஒரு வகை கார்போஹைட்ரெட் எனபது குறிப்பிடத்தக்கது. 

5. சிறந்த உடற்பயிற்சி செயல்திறன்

பொதுவாக உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் புரோட்டீன் உணவுகள் கட்டாயம் தேவை என கூறப்படுகிறது. இருப்பினும், புரதத்துடன் கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்து உண்பது செயல்திறனை மேம்படுத்துவதோடு, உடல் ஆற்றலை மீட்டெடுக்க உதவும். உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகளை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்க உதவும் 4 பெஸ்ட் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வை வழங்கும் சில... சிறந்த வீட்டு வைத்தியங்கள்

மேலும் படிக்க | சேதமடைந்த கல்லீரலுக்கும் உயிர் கொடுக்கலாம்.... நீங்கள் சாப்பிட வேண்டியதும்... தவிர்க்க வேண்டியதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News