10 வயதில் 200 கிலோ... போராடி இப்போ 77 கிலோவுக்கு உடல் எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: 10 வயதில் 200 கிலோவுக்கு மேல் இருந்த ஒருவர் தற்போது அவரது 40 வயதில்  77 கிலோ எடைக்கு வந்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2025, 10:15 AM IST
  • சிறுவயதில் இருந்தே உடல் பருமானோடு இருந்தவர்.
  • கரோனா காலகட்டத்தில் இவருக்கு 4 முறை கரோனா வந்துள்ளது.
  • தற்போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார்.
10 வயதில் 200 கிலோ... போராடி இப்போ 77 கிலோவுக்கு உடல் எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: உடல் எடையை குறைக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் நிச்சயம் மருத்துவர், ஊட்டச்சத்தை நிபுணர், உடற்பயிற்சி பயிற்சியாளர் ஆகியோரின் ஆலோசனைக்கு பின்னர்தான் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதே நேரத்தில் பிறரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை தெரிந்துகொள்வதன் மூலம் தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் பெறலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 10 வயதில் 200 கிலோவில் இருந்த அமித் கண்ணா 

அந்த வகையில், பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர் அமித் கண்ணா அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் சிறு வயதில் இருந்து நோயுற்ற உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதில் இருந்து போராடி தற்போது உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் திரும்பியிருக்கிறார். 

அமித் கண்ணா, அவரது 10 வயதிலேயே 200 கிலோ உடல் எடையுடன் இருந்துள்ளார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. ஆனால், இளம் வயதை விட தற்போதே அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார் எனலாம். இளம் வயதில் உடல் பருமனால் அவதிப்பட்டதால் இவரால் ஓட்டப்பந்தயம், சைக்கிள் அழுத்துவது, விளையாட்டுகள் ஆகியற்றில் பங்கேற்க இயலாமலேயே இருந்துள்ளார்.

Weight Loss Journey: நிரந்தர தீர்வுகளை தராத முயற்சிகள்

கடுமையான உணவுமுறை மாற்றங்கள், உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சைகள், அவ்வளவு ஏன் பட்டினி கிடந்தும் உடல் எடையை குறைக்க பார்த்துள்ளார். ஆனால் இவை எதுவும் அவருக்கு நிரந்தர தீர்வை கொடுக்கவில்லை. எடை குறைந்தாலும் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதுவே வாடிக்கையாகவும் இருந்துள்ளது. மேலும், உடல் பருமனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருந்த காரணத்தினால், கரோனா காலகட்டத்தில் இவருக்கு நான்கு முறை தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா மட்டுமின்றி வேறு வைரல் தொற்றுகளாலும் இவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

Weight Loss Journey: அமித் கண்ணா எடுத்த அந்த முடிவு

இந்த காலகட்டத்தில் உடல் பருமனால் உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் அமித் கண்ணாவுக்கு சீர்கெட்டுள்ளது. இதனால், உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை அமித் அந்த காலகட்டத்தில் பெற்றுள்ளார். இதற்காக தனது உடற்தகுதி மற்றும் உணவுமுறையை கண்காணித்து, ஆலோசனை வழங்க பயிற்சியாளர் ஒருவரை அமித் நியமித்திருக்கிறார்.

தினமும் குறைவான கலோரிகளை உட்கொண்டது மட்டுமின்றி, தினமும் நிர்ணயிக்கப்பட்ட ஸ்டெப்களை கடப்பதை உறுதிசெய்துள்ளார். அதிலும் குறிப்பாக, பெரிய கட்டடங்களில் செல்வதாக இருந்தாலும் அமித் கண்ணா படிக்கட்டுகளையே பயன்படுத்தியிருக்கிறார். இதை தொடர்ந்து செய்தது அவருக்கு பயனளித்து இருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில்,"எனது இதயளவிற்கு மட்டுமே சாப்பிடுகிறேன். தற்போது உடற்பயிற்சியும் சவாலானதாக இல்லை" என்றார். 

Weight Loss Journey: 6 மாதங்களில் 25 கிலோவை குறைத்த அமித் கண்ணா

ஜிம்மில் கார்டியோ மட்டுமின்றி எடை தூக்கும் பயிற்சிகளையும் அவர் செய்து வந்துள்ளார். மேலும், அதிக புரதம் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட்ஸ் கொண்டு உணவுமுறையை அவர் பின்பற்றியிருக்கிறார். இதனால் 6 மாதங்களில் அவர் 25 கிலோவை குறைத்திருக்கிறார். இப்போது வெறும் 77 கிலோவில்தான் உள்ளார். உடல் எடையை குறைத்த ஆனந்தத்தில் அவர் கூறியதாவது,"இப்போது என்னால் ஓட முடிகிறது, trampolines-ல் குதிக்க முடிகிறது, சிறுவயதில் நான் தவறவிட்ட அனைத்தையும் இப்போது அனுபவிக்கிறேன்" என்கிறார். 

தற்போது அமித் கண்ணாவின் உடல் மட்டுமின்றி மனமும் ஆரோக்கியமான நிலையை அடைந்துவிட்டது. தற்போதைய பழக்கவழக்கத்தை அப்படியே தொடர இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்."ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த சிந்தனையே என்னை ஊக்கப்படுத்துகிறது" என்கிறார். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அமித் கண்ணாவின் உடல் எடை குறைப்பு அனுபவம் ஆகும். இதனை நீங்கள் பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 83 கிலோவில் இருந்த 'மிஸ் இந்தியா' மாடல்... 30 கிலோவை குறைக்க அவர் செய்தது என்ன?

மேலும் படிக்க | இரவு இந்த பானத்தை குடித்து... 7 கிலோவை 21 நாள்களில் குறைத்த பெண் - அது எப்படி?

மேலும் படிக்க | 122 கிலோவை இருந்த இளைஞர்... 33 கிலோவை குறைக்க ஸ்பெஷலாக செய்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News