)
Chemical Adulteration in Fruits : அண்மைக்காலமாக தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பதாக பெரிய சர்ச்சைகள் எழுந்துள்ளது. தர்ப்பூசணி மட்டுமல்லாமல் வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் கூட சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் அதனை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போதும் தொடர் கதையாகவே இருக்கிறது. வியாபாரிகள் சீக்கிரம் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கும் இப்படியான குறுக்கு வழிகள் மக்களின் ஆரோக்கியத்தில் நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகின்றன.
தர்பூசணி பழங்களை வாங்கும்போது முகர்ந்து பார்க்கவும். வாசனையில் மாறுபாடு இருந்தால், அதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அந்த பழத்தை சாப்பிட வேண்டாம். நிறம் கலக்கப்பட்டுள்ளதா? இனிப்பு சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் இருந்தால் ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து தடவி பார்க்கவும். பழத்தில் இருந்து சிவப்பு நிறம் பட்டால் அந்த பழத்தை சாப்பிட வேண்டாம். செயற்கை இனிப்பு என்பது சாப்பிட்டு பார்த்தால் கண்டுபிடிக்கலாம். மேலும் முழுப் பழத்தின் தோலில் எங்கேனும் ஊசி அறிகுறிகள் தென்பட்டாலும் அப்பழத்தை வாங்க வேண்டாம். இதுதவிர, ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும், எந்தெந்த பழங்களில் எந்த மாதிரியான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பதையும் இங்கே தெரிந்துகொள்வோம்.
பழங்களில் ரசாயன கலப்படங்கள் (Chemical Adulteration) செய்யப்படுவது ஆரோக்கியத்திற்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகிறது. இந்த கலப்படங்களில் கார்பைடு, செயற்கை நிறங்கள், பூச்சிக்கொல்லிகள், இன்சுலின் ஊசி மற்றும் பாதுகாப்பற்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உடலில் பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
1. கார்பைடு (Calcium Carbide) பழுக்க வைப்பது
கார்பைடில் உள்ள ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் நச்சுத்தன்மை கொண்டவை. இதனால், வயிற்றுப் புண், வாந்தி, தலைவலி. நரம்பு மண்டல பாதிப்பு (Neurological Damage) மற்றும்நீண்டகால விளைவுகளாக புற்றுநோய் (Cancer) ஏற்படலாம்.
2. செயற்கை நிறங்கள் (Artificial Colors)
மெட்டனில் மஞ்சள் (Metanil Yellow) போன்றவை கல்லீரல் சேதம், சிறுநீரக பிரச்சினை ஏற்படுத்தும். குழந்தைகளில் ஹைபர்ஆக்டிவிட்டி (ADHD) பிரச்சனைகளை கொண்டு வரும். தோல் எரிச்சல், அலர்ஜி வரும்.
3. பூச்சிக்கொல்லிகள் (Pesticides) மிகைப்படுத்தல்
உடனடியாக வாந்தி, வயிற்றுப்போக்கு. நாள்பட்ட விளைவுகளாக ஹார்மோன் சீர்குலைப்பு, கர்ப்பப்பை பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு வரும். ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள் நரம்பு மண்டலத்தை தாக்கும்.
4. இன்சுலின் ஊசி / சர்க்கரை கலப்பு
இரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி டயாபெட்டிக் பாதிப்பு வரும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து.
5. வாக்ஸ் பூசுதல் (Wax Coating)
பழங்களை மினுமினுப்பாக காட்ட பெட்ரோலியம் வாக்ஸ் பூசப்படுகிறது. இதனால், செரிமான பிரச்சினைகள், குடல் அடைப்பு ஏற்படும். கார்சினோஜெனிக் புற்றுநோய் தூண்டும் ஆபத்தும் இருக்கிறது.
6. பார்மலின் (Formalin) பயன்பாடு
பழங்களை நீண்ட நாட்கள் புதியதாக காட்ட பார்மலின் தெளிக்கப்படுகிறது. கண்கள், மூச்சுக்குழாய் எரிச்சல். DNA சேதம், புற்றுநோய் ஆபத்து உள்ளது.
இவற்றில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால்வினிகர் / உப்பு நீரில் 15 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி உண்ணவும். இயற்கை பழங்களை வாங்கவும். ஆர்கானிக் ஸ்டோர்களை தேர்ந்தெடுக்கவும். Dry Fruits போன்றவற்றை கலப்படம் இல்லாத இடங்களில் வாங்கவும்.
பழங்களில் செய்யப்படும் கலப்படங்களால் குறுகிய காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். நீண்ட காலத்தில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வரை ஏற்படும். எனவே, எப்போதும் பழங்களை கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ