)
நமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தில் வெற்றிலை பாக்கு அல்லது தாம்பூலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ளப்படும் பலவிதமான சடங்கு சம்பிரதாயங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது வெற்றிலை பாக்கு தான். சீமந்தம் வளைகாப்பு, குழந்தை பிறந்த பின் நடத்தப்படும் பேர் வைக்கும் விழா முதல், திருமணம், புதுமனை புகுவிழா, என பலவிதமான காலகட்டங்களில் நடத்தப்படும் பலவித விழாக்கள் மட்டும் பண்டிகைகளில் வெற்றிலை பாக்கை தவறாமல் காணலாம்.
பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெற்றிலை
தினமும், சாப்பிட்டபின் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இன்றைக்கும் பலருக்கு இருப்பதை காணலாம். ஆனாலும், இந்த பழக்கத்தை கிராமங்களில் தான் காண முடிகிறதே தவிர, நகரங்களில் காண முடிவதில்லை. தினமும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தால் ஆண்மை பிரச்சனைகள், மலச்சிக்கல், சுவாச பிரச்சனை என, மன அழுத்தம் என பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு அவற்றை வராமலும் தடுக்க முடியும். எனவே நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ, தினமும் வெற்றிலை பாக்கு போடுவது மிக அவசியம். அந்தப் பழக்கத்தை (Health Tips) இன்றே தொடங்குங்கள்.
மூளை மற்றும் இதய ஆரோக்கியம்
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில், சேர்த்து வாயில் போட்டு மெல்லுவதால் மூளைய சுறுசுறுப்பு அடைவதோடு வலுவாக இருக்கும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேத மருந்துகள் பலவற்றை வெற்றிலியுடன் சேர்த்து சாப்பிட சொல்லும் பழக்கமும், பல காலங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்மை பிரச்சனைக்கு தீர்வைத் தரும் வெற்றிலை பாக்கு
வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தால், கருத்தரிப்பு மையங்கள் பக்கம் போகும் வாய்ப்பை தவிர்த்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களின் மலட்டுத்தன்மை, குறிப்பாக விந்தணு குறைதல் எந்த அணுக்களின் தரம் மற்றும் வீரியம் குறைதல் ஆகியவற்றிற்கு தாம்பூலம் மிகச் சிறந்த மருந்து என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர். வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்சி சாவிக்கோல் என்னும் கலவை ஆண்களின் விதைப்பையை வலுப்படுத்துவதோடு, விதைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும். விந்தணுவிற்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு.
மன அழுத்தத்தை போக்கும் மருந்து
வெற்றிலை பாக்கை நன்றாக மென்று சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம், மனதில் நிம்மதி பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெற்றிலையில் காணப்படும் பினாலிக் கலவைகள், உடலில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கரிம சேர்மங்களை வெளியிடுவதே இதற்கு காரணம்.
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் வெற்றிலை
வெற்றிலையில் ரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் உள்ளது. எனவே சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு போடுவதால், செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, ரத்த சர்க்கரை அளவு சாப்பிட்ட பின் சட்டு என்று அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் வெற்றிலை
வெற்றிலைக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு. சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு, வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் வெற்றிலைக்கு கபத்தில் நீக்கும் ஆற்றல் உண்டு. மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணம் பெற வெற்றிலை உதவும்.
மலச்சிக்கலை தீர்க்க உதவும் சிறந்த கை வைத்தியம்
வெற்றிலைக்கு செரிமானத்தை மேம்படுத்தும் ஆற்றல் உள்ள நிலையில், வெற்றிலை பாக்குப் போடும் பழக்கத்தினால், மலச்சிக்கலுக்கு தீர்வை காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ