உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 Covid தடுப்பு மருந்துகளுக்கு சீன ஒப்புதல்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 கோவிட் தடுப்பூசிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு சீனா அங்கீகாரம் அளித்துள்ளது.  

Written by - ZEE Bureau | Last Updated : Feb 21, 2021, 08:51 PM IST
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 கோவிட் தடுப்பூசிகளீன் மருத்துவ பரிசோதனைகளுக்கு சீனா ஒப்புதல்
  • இதில் ஆறு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன
  • சினோபார்ம் மற்றும் சினோவாக் பயோடெக் தயாரித்த 2 COVID தடுப்பூசிகளுக்கு சீனா நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை அளித்துள்ளது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 Covid தடுப்பு மருந்துகளுக்கு சீன ஒப்புதல்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 16 கோவிட் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கு சீனா அங்கீகாரம் அளித்துள்ளது. இவற்றில், ஆறு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இந்த சமீபத்திய தடுப்பூசிகள் மறுசீரமைப்பு புரதம், அடினோவைரஸ் திசையன், நியூக்ளிக் அமிலம் மற்றும் அட்டென்யூட்டட் இன்ஃப்ளூயன்ஸா-வைரஸ் (recombinant protein, adenovirus vector, nucleic acid and attenuated influenza-viruses technologies) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனமான சினோபார்ம் மற்றும் சினோவாக் பயோடெக் தயாரித்த இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு சீனா நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை ஏற்கனவே அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News