கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் டேஞ்சர் உணவுகள்: அலர்டா இருங்க மக்களே!!

Causes For Cholesterol: கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் சரியான உணவை அடையாளம் கண்டு அவற்றை உட்கொள்வது மிக அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2025, 06:23 PM IST
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது.
  • எந்த உணவுகள் கொழுப்பை அதிகரிக்கும்.
  • எதை சாப்பிடுவது நல்லது?
கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் டேஞ்சர் உணவுகள்: அலர்டா இருங்க மக்களே!!

Causes For Cholesterol: இன்றைய காலகட்டத்தில் பல வித வாழ்க்கை முறை நோய்கள் நம்மில் பலரை ஆட்கொள்கின்றன. அவற்றில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது.

Add Zee News as a Preferred Source

கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் உள்ள மெழுகு போன்ற ஒரு பொருளாகும். இது இரண்டு வகைப்படும்: கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நல்ல கொழுப்பு அவசியம். எனினும், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், அது இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றது. கொலஸ்ட்ரால் பல கடுமையான நோய்களுக்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் சரியான உணவை அடையாளம் கண்டு அவற்றை உட்கொள்வது மிக அவசியமாகும். அதிக அளவில் எண்ணெய் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிப்பதாக பொதுவாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க அதிக எண்ணெய் மட்டும் காரணமல்ல. எண்ணெயுடன் சேர்த்து, நாம் உண்ணும் வேறு சில விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் தவிர வேறு உணவுகளும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க காரணமாகின்றன.

சமையல் எண்ணெயை விட, விலங்குக்கள் சார்ந்த உணவு, அதாவது அசைவ உணவுகள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க அதிக காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் சமையலுக்கு எந்த வகையான எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். அது எவ்வளவு தூய்மையானது என்பதைப் பொறுத்து எண்ணெயால் ஏற்படும் கொழுப்பின் அதிகரிப்பு இருக்கும். சரியான, சுத்தமான மற்றும் தூய எண்ணெய் பயன்படுத்தப்பட்டால், கொழுப்பின் அளவு சமநிலையில் இருக்கும்.

இந்த உணவுகள் கொழுப்பை அதிகரிக்கும்

பால் பொருட்கள்: விலங்கு பொருட்களில் பால் மற்றும் பால் பொருட்களான தயிர், கிரீம் போன்றவை கொழுப்பின் அளவை அதிகரிக்கும். நெய் நல்ல கொழுப்பின் மூலமாகும். இதை குறைந்த அளவில் உட்கொண்டால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கும்.

இறைச்சி: சிவப்பு இறைச்சி, ஆட்டு இறைச்சி அல்லது கோழி மற்றும் முட்டைகளும் அதிக கொழுப்பு பிரச்சனைக்கு ஒரு காரணமாகலாம். அவற்றை அதிகமாக உட்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும். இதய நோயாளிகள் அசைவ உணவு உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

மீன்: சில மீன்கள் மற்றும் கடல் உணவுகளிலும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. இவற்றை அதிகமாக சாப்பிடுவதும் கொழுப்பை அதிகரிக்கும்.

துரித உணவுகள்: இது தவிர, துரித உணவுகள், ஜங் ஃபுட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

எதை சாப்பிடுவது நல்லது?

- ஓட்ஸ், பழுப்பு அரிசி, கினோவா, தினை வகைகள் போன்ற முழு தானியங்களை உட்கொள்ளலாம்.
- வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும், காய்களையும் உட்கொள்வது கொழுப்பை குறைத்து உடலில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும்.
- நெல்லிக்காய் சாப்பிடுவது கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
- இலவங்கப்பட்டை, கொள், எலுமிச்சை, பூண்டு ஆகியவற்றுக்கும் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பப்பாளி விதைகளை இனி தூக்கி போடாதீங்க: ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்.... லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | உங்கள் நாளை சீரக தண்ணீருடன் தொடங்குங்கள்.. இந்த பிரச்சனை எல்லாம் வராது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News