உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கணுமா... இந்த தவறுகளை செய்யாதீங்க

சமூக ஊடக தளங்களில் பார்ப்பது போல் எடை இழப்பு அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சில நாட்களில் அல்லது ஓரிரு நாட்களில் எடையைக் குறைக்க எந்த பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியும் இல்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2025, 08:56 PM IST
  • எடை இழப்பு முயற்சிகளுக்கு இன்றே பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது
  • போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்பை ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்குகிறது.
  • உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்யாமல் இருத்தல்
உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கணுமா... இந்த தவறுகளை செய்யாதீங்க

சமூக ஊடக தளங்களில் பார்ப்பது போல் எடை இழப்பு அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சில நாட்களில் அல்லது ஓரிரு நாட்களில் எடையைக் குறைக்க எந்த பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியும் இல்லை. ஒரு சில கிலோகிராம் எடை இழப்புக்குப் பிறகு எடையைக் குறைப்பது படிப்படியாக சவாலானதாக ஆகிவிடும். எடை இழக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக பொரும்பலானோர் சில தவறுகளைச் செய்கிறார்கள். அது சில நேரங்களில் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 

Add Zee News as a Preferred Source

இன்று  பெரும்பாலானோர் மேற்கொள்ளும் சில தவறுகளை அறிந்து கொள்ளலாம்.

உணவைத் தவிர்ப்பது

உணவைத் தவிர்ப்பது கலோரிகளைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகத் தோன்றலாம், ஆனால் அதனால், பெரும்பாலும் பின்னர் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவதற்கு தான் வழிவகுக்கும். அதிலும் காலை உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்குவதோடு, கடுமையான பசியைத் தூண்டும். எனவே, காலையில், புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட சிறிய, சமச்சீரான உணவை அளவோடு உண்ணுங்கள்.

ரெடி டு ஈட் வகை உணவுகள்

பல ரெடி டு ஈட் வகை உணவுகள் "குறைந்த கொழுப்பு", "சர்க்கரை இல்லாத" அல்லது "டயட் உணவு" என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இந்த உணவுகள் பசியை அதிகரிக்கும், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், மேலும் வயிறு நிறைந்த உணர்வையும் தராது.  இதற்கு பதிலான முழு தானியங்களை கொண்டு வீட்டில் தயாரிக்க்ப்படும் உணவுகள்,   காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும்

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்யாமல் இருத்தல்

முறையாக பயிற்சியாளர் ஆலோசனை பெறாமல், அதிக அலவில் உடல் பயிற்சி  செய்வது அல்லது ஓய்வு இல்லாமல் உடற்பயிற்சி செய்து தீங்கு விளைவிக்கும். இதனால் சோர்வு, காயங்கள் ஏற்படக் கூடும்.  இதனால் கொழுப்பு குறையாது. தகுந்த ஆலோசனையுடன் வலிமை பயிற்சி, கார்டியோ மற்றும் ஓய்வு நாட்கள் உள்ளிட்ட சீரான உடற்பயிற்சி திட்டத்தைப் (Health Tips) பின்பற்றவும்.

போதுமான தூக்கம் இல்லாத நிலை

தூக்கமின்னை அல்லது 6–7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தூக்கம் சரியாக இல்லை என்றால் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து, பசி அதிகம் எடுக்கும். தினமும் 7–8 மணிநேர தரமான தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.

சர்க்கரை சேர்த்த பானங்கள்

சர்க்கரை பானங்கள், பழச்சாறுகள் மிகவும்  தீங்கு விளைவிக்கும். இவை "காலி" கலோரிகளை வழங்குகின்றன, மேலும் உங்களது வயிற்றை நிரப்பாது. இதற்கு பதிலாக, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர், மூலிகை டீ வகைகள் அல்லது பிளாக் காபி குடிக்கவும். சோடா, ஆடம்பரமான காபி பானங்கள் மற்றும் அதிகப்படியான மதுவைத் தவிர்க்கவும்.

சாத்தியம் அல்லாத இலக்குகளை அமைத்தல்

எடை இழப்பு முயற்சிகளுக்கு இன்றே பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அல்லது உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது பலன் தராது. முடிவுகள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்தாதபோது விரக்தியையும் கைவிடுதலையும் ஏற்படுத்தும். சாத்தியமான குறுகிய கால இலக்குகளை (வாரத்திற்கு 0.5–1 கிலோவை இழப்பது போன்றவை) அமைத்து நீண்ட கால ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது

போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்பை ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்குகிறது. பசியை அதிகரிக்கிறது. தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும்.

மேலும் படிங்க |  விரைவான உடல் எடை இழப்பு.. "சரியாக கையாள வேண்டும், இல்லையென்றால்".. நிபுணர் எச்சரிக்கை!

மேலும் படிங்க | 30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News