Pumpkin Seeds For Cholesterol Control: இன்றைய அவசர காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித வாழ்க்கை முறை நோய்கள் மக்களை ஆட்கொள்கின்றன. இவற்றில் ஒன்று கெட்ட கொழுப்பின் அதிகரிப்பு. கெட்ட கொழுப்பு என்பது ஒரு வகை ஒட்டும் பொருளாகும். இது நரம்புகளில் குவிந்து இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அதனால், இதயப் பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சில எளிய, இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். நாம் தினமும் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களே இதில் நமக்கு உதவும். அவற்றில் பூசணி விதைகளும் அடங்கும். கெட்ட கொழுப்பு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள், தங்கள் உணவில் பூசணி விதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இது நரம்புகளில் சிக்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். இந்த விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கலாம்.
பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பூசணி விதைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை நீக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க, பூசணி விதைகளை எப்படி உட்கொள்ளலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
பூசணி விதைகளை எப்படி உட்கொள்வது? வறுத்தா அல்லது பச்சையாகவா?
பூசணி விதைகளை பச்சையாகவும் உட்கொள்ளலாம், அல்லது வறுத்தும் சாப்பிடலாம். வறுத்த விதைகள் சுவையாக இருக்கும். தினமும் ஒரு கைப்பிடி அளவு, அதாவது சுமார் 30 கிராம் விதைகளை உட்கொள்ள வேண்டும்.
பூசணி விதை எண்ணெய்
கொழுப்பைக் குறைக்க பூசணி விதை எண்ணெயையும் பயன்படுத்தலாம். கொழுப்பைக் குறைக்க, இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
சாலட் அல்லது ஸ்மூத்தி
பூசணி விதைகளை சாலட், தயிர் மற்றும் ஸ்மூத்தியில் கலந்து உங்கள் உணவின் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை ஓட்மீலுடன் கலந்தும் சாப்பிடலாம். இது தவிர, இந்த விதைகளின் பொடியை சூப் மற்றும் காய்கறிகளில் கலந்து உட்கொள்ளலாம்.
பூசணி விதைகளின் பிற நன்மைகள்
- செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
- உடல் தொற்றுகளை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும்.
- மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
- இது நினைவாற்றலை மேம்படுத்தும்.
- மன அழுத்தத்தைக் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை அலட்சியமாக நினைக்காதீங்க
மேலும் படிக்க | 5 வகை பேரீச்சம்பழங்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய களஞ்சியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









