Bone Health Tips: சுவர் இல்லாமல் சித்திரம் எழுத முடியாது என்று கூறுவார்கள். எலும்புகள் நம் உடலின் சுவர் போன்றவை. இவை ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலின் சீரான இயக்கம் சாத்தியமாகும். எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் மிகவும் முக்கியமானது. கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமடையக்கூடும்.
கால்சியம் குறைபாட்டைப் போக்க, பலர் பல வித மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யலாம். இந்த இயற்கையான வழிகளில் எள்ளும் ஒன்று என ஆயுர்வேத மருத்துவர் இர்ஃபான் கான் கூறியுள்ளார். வெள்ளை எள்ளில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். கால்சியம் குறைபாட்டை போக்க வெள்ளை எள்ளை எப்படி உட்கொள்வது? இதை பற்றி மருத்துவர் இர்ஃபான் என்ன கூறியுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.
வெள்ளை எள்
வெள்ளை எள்ளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. வெள்ளை எள்ளில் பால் பொருட்களை விட அதிக கால்சியம் உள்ளதாக கூறப்படுகின்றது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது.
கால்சியம் குறைபாட்டை நீக்க வெள்ளை எள்ளை எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில், ஒரு கப் எள்ளை வாணலியில் நன்றாக வறுக்கவும். வெள்ளை எள் தங்க நிறமாக மாறியதும், அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அது ஆறிய பிறகு பொடி செய்து கொள்ளவும். இப்போது இந்தப் பொடியை ஒரு பெட்டியில் சேமித்து வைக்கவும்.
வெள்ளை எள் பொடியை சாப்பிட சிறந்த நேரம் எது?
நிபுணர்களின் கூற்றுப்படி, எள் பொடியை தினமும் காலையில் 1 ஸ்பூன் மற்றும் மாலையில் 1 ஸ்பூன் பாலில் சேர்த்து உட்கொள்ளலாம். இது தவிர, எள் உருண்டையும் உட்கொள்ளலாம். எள் பொடியை பாலில் கலந்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இப்படி உட்கொள்வதன் மூலம் விரைவான பலன்களைக் காணலாம்.
எந்த வயதினர் எள் சாப்பிடலாம்?
வெள்ளை எள்ளை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என மருத்துவர் கூறுகிறார். குழந்தைகள் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ, அவர்களுக்கு எள் கொடுக்கலாம். வயதானவர்களும் எள் விதைகளை உட்கொள்ளலாம். எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் எள் சாப்பிடக்கூடாது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எடை குறைப்பு முதல் மன அமைதி வரை...துளசி நீரின் அற்புத நன்மைகள்!
மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் இரத்த அழுத்தம் வரை... வாழைப்பழத்தின் வியக்க வைக்கும் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









