Morning Routine Drinks: உடல் எடையை குறைப்பதாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் சரி உங்களின் உணவு முறை அதில் முக்கிய பங்கு வகிக்கும். உணவுகள் குறித்து பேசும்போது நிச்சயம் காய்கறி ஜூஸ் குறித்தும் பேச வேண்டியது அவசியமாகிறது.
Morning Routine Drinks: காய்கறி ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நீங்கள் தொடர்ச்சியாக காய்கறிகளின் ஜூஸை குடித்து வந்தால் உடலில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். பல காய்கறிகளின் ஜூஸில் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. குறிப்பாக அவற்றில் இருக்கும் வைட்டமின்கள், கனிமங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது குறைந்த கலோரிகளையும் கொண்டது.
காய்கறி ஜூஸை குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் வேகமாகும். இது உங்களின் கொழுப்பை கரைக்க உதவும், இதனால் உடல் எடை குறைப்பும் எளிதாகும். அந்த வகையில் நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதுபோன்ற காய்கறிகலின் ஜூஸை குடித்தால், உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கு நல்லது. அதுமட்டுமின்றி நாள் முழுக்க நீடித்த ஆற்றலை பெறவும் இது உதவும்.
Morning Routine Drinks: 4 காய்கறி ஜூஸ்கள்
காய்கறி ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை நீங்கள் தொடர்ச்சியாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியமற்ற நொறுக்கி தீனிகளை தேடி செல்ல மாட்டீர்கள். அந்த வகையில் இந்த நான்கு காய்கறிகளின் ஜூஸை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பலப்படும். அவை குறித்து இங்கு காணலாம்.
Morning Routine Drinks: வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸ் என்பது உடல்எடை குறைப்புக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. உங்கள் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும், வயிறை நிறைவாகவும் வைத்திருக்கும். இதில் வைட்டமின் K, பொட்டாசியம் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சி மாற்றத்தை வேகப்படுத்துவதற்குமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
Morning Routine Drinks: கேரட் ஜூஸ்
கேரட்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் குறைந்த கலோரிகள் உள்ளன. இதுவும் உடல் எடை குறைப்புக்கு பேரு உதவியாக இருக்கும். வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக கண் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது உதவும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
Morning Routine Drinks: சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காய் குறைந்த கலோரிகளைக் கொண்டது. அதே நேரத்தில் அதிக நார்ச்சத்தை கொண்டது. அதிக நார்ச்சத்து இருப்பதால் இது வயிற்றுக்கு நிறைவை அளிக்கும். தேவையற்ற பசி ஏற்படாமல் தடுக்கும். உங்களின் செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் கண்டிப்பாக உடல் எடை குறைப்புக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
Morning Routine Drinks: பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸிலும் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் அதிக ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், கனிமிங்கள், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதனை வெறும் வயிற்றில் குடிப்பது மிக மிக நல்லது, அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைவு ஏற்படும். மேலும் செரிமானமும் சீராக இருக்கும். அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை வேகப்படுத்தும். பீட்ரூட் தனியாக ஜூஸ் போட்டும் குடிக்கலாம், மேலும், பீட்ரூட் உடன் கேரட், ஆப்பிள் போன்றவற்றையும் சேர்த்து கூட நீங்கள் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தாலே போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









