Apple To Control Cholesterol: உலக மக்களை ஆட்டிப்படைக்கும் வாழ்க்கை முறை நோய்க்களில் கெட்ட கொழுப்பு மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக கெட்ட கொழுப்பின் பிரச்சனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, இதய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, துரித உணவுகள், சிவப்பு இறைச்சி மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு ஒட்டும் பொருளாகும். இது நரம்புகளில் ஒட்டிக்கொண்டு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள், இதன் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மருந்துகள் மற்றும் பல மருந்துவ பரிந்துரைகளின் உதவியை நாடுகிறார்கள். ஆரோக்கியமான உணவுமுறை, சரியான உடற்பயிற்சி மற்றும் சிறந்த வாழ்க்கை முறை மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். சில இயற்கையான, எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். நாம் தினமும் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களே இதில் நமக்கு உதவும். அந்த இயறையான வழிகளில் ஆப்பிளும் ஒன்று. கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
கெட்ட கொழுப்பைக் குறைக்க ஆப்பிளின் நன்மைகள்
ஆப்பிள் சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உள்ளதாக NCBI அறிக்கை தெரிவித்துள்ளது. இது நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. ஆப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஆப்பிள்களில் ஆண்டிஆக்சிடெண்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது தவிர, ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பல்வேறு ஊட்ட்ச்சத்துகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- ஆப்பிள் சாப்பிடுவது வயிற்றை நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கிறது.
- ஆப்பிள் பசியைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
- ஆப்பிள் சாப்பிடுவதால், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
- உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் ஆப்பிள் நல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், நமது உடல் தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
- நீரிழிவு நோயாளிகளும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
- இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் உதவியாக இருக்கும்.
- ஆப்பிள் சருமத்திற்கும் ஆரோக்கியமானது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குழந்தைக்கு பாட்டில்லில் பால் கொடுக்கறீங்களா? இதை கவனியுங்க
மேலும் படிக்க | ஜிம்முக்கு போகாத பெண்... 30 கிலோவை 8 மாதங்களில் குறைக்க உதவிய இந்த 13 உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









