சுகர் அளவை சுருக்க குறைக்க உதவும் பச்சை இலை.. இப்படி சாப்பிடுங்க

Bay Leaf Benefits: பல சமையல் பொருட்களில் உபயோகிக்கப்படும் பிரியாணி இலை, நனது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பொக்கிஷமாகும். எனவே இதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 17, 2025, 03:35 PM IST
  • பிரியாணி இலை பல மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது.
  • தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.
  • பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சுகர் அளவை சுருக்க குறைக்க உதவும் பச்சை இலை.. இப்படி சாப்பிடுங்க

Bay Leaf Benefits: இந்திய சமையலறையில் உணவின் சுவையை அதிகரிக்க உதவும் மசாலா பொருட்களில் ஒன்று தான் பிரியாணி இலை. இந்த பிரியாணி இலை நமது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பொதுவாக இந்த பிரியாணி இலைகள் காய்கறிகள், புலாவ் மற்றும் குர்மா போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்த பிரியாணி இலை பல மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. 

Add Zee News as a Preferred Source

சைவ உணவு முதல் அசைவ உணவு வரை அனைத்திலும் பிரியாணி இலை சேர்க்கப்படுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தியா, சீனா மற்றும் பூட்டான் போன்ற தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் இதன் விளைச்சலும் தேவையும் மிக அதிகம். நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும், பிரியாணி இலைகள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மருத்துவ குணம் நிறைந்த பிரியாணி இலைகளில் பொட்டாஷியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இந்த இலையின் நன்மைகளை இந்த தொகுப்பில் விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | 109 கிலோவில் இருந்த பெண்... 33 கிலோ உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா?

மன அழுத்தம் - ஒவ்வாமை: ஆயுர்வேத மறுத்துவத்தின்படி, பிரியாணி இலையானது ஒவ்வாமையிலிருந்து நிவாரணம் தர உதவுவதாக கூறப்படுகிறது. இரண்டு பிரியாணி இலைகளை அன்றாட தேநீரில் சேர்த்து குடித்து வந்தால் ஒவ்வாமை பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெறலாம். இது தவிர, இந்த பிரியாணி இலையானது மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த இலையானது செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்று நோயில் இருந்து விடுப்படவும் உதவும். இந்த இலைகளில் ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும். 

செரிமான அமைப்பை வலுப்படுத்தும்: வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பிரியாணி இலைகளில் குவிந்துள்ளன, இந்த சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுவதுடம், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும். அதனுடன் இந்த பிரியாணி இலை நமது செரிமான அமைப்பை மேம்படுத்தி, வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்க உதவும்: சில மருத்துவ ஆய்வுகளின் படி, பிரியாணி இலைகலை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயை ஏற்படும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் நிறைந்திருக்கும் கேட்டசின், லினலூல் மற்றும் பார்த்தீனோலைடு போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் மட்டுமே. இவை உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன.

சுகர் மற்றும் சைனஸ் தொலைக்கு தீர்வு தரும்: கரிம சேர்மங்கள் நிறைந்திருக்கும் பிரியாணி இலையை உட்கொள்வதான் மூலம் குடல் நோய்களில் இஉந்து தீர்வுப் பெறலாம். ஏனெனில் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். இதனுடன், பிரியாணி இலையில் காணப்படும் நறுமணப் பண்புகள் சைனஸ் பிரச்சினையில் நிவாரணம் அளிக்க உதவும். அதேபோல் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பொடி செய்து ஒரு மாதம் காலம் சாப்பிட இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய அமைப்பில் மாற்றம்.. தசை நரம்பு பாதிப்புகள்... பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் நிலை என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News