)
Coriander Seeds Benefits Tamil : இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக செரிமான பிரச்சினைகள் பலரும் இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள். ஆனால் செரிமான அமைப்பை பாதுகாப்பாக வைக்காவிட்டால் பல நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்போது ஆரோகியமும் சிறப்பாக இருக்கும். அந்தவகையில் செரிமான அமைப்பு பிரச்சனைகளை தீர்க்க கொத்தமல்லி சிறந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல நன்மைகளைக் கொண்டிருக்கும் கொத்தமல்லி சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும், அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
ஆச்சார்யா பாலகிருஷ்ணனின் இதுகுறித்து பேசும்போது, கொத்தமல்லி வெறும் மசாலாப் பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கான அமிர்தம். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மூட்டு வலியை குறைப்பதற்கும், யூரிக் அமிலத்தை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இதை சரியான முறையில் உணவில் சேர்த்துக்கொண்டால், பல நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
டான்சிலைட் நிவாரணம்
தொண்டை வலி அல்லது டான்சிலைட் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் கூறுகிறார். டான்சிலைட் அதிகரித்துள்ள நபர்களுக்கு, வெந்தயம் மற்றும் கொத்தமல்லியை அரைத்து கோதுமை மாவுடன் கலந்து பூசினால், டான்சிலைட் நிவாரணம் கிடைக்கும். இது தொண்டையின் வீக்கத்தையும் குறைக்கும்.
தொண்டை வலி நிவாரணம்
தொண்டை வலி மற்றும் உணவு உட்கொள்ளும் போது சிரமம் அனுபவிப்பவர்களுக்கு கொத்தமல்லி பயனுள்ளதாக இருக்கும். தொண்டை வலி ஏற்பட்டால், 4-5 கொத்தமல்லி விதைகள் மற்றும் 1-2 கருமிளகு எடுத்து மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இதிலிருந்து வெளியே வரும் எச்சிலை விழுங்குங்கள். இது தொண்டை வலியை குறைக்கும். குரல் மாற்றம் ஏற்பட்டால் அதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
செரிமானத்திற்கு சிறந்தது
ஆச்சார்யா பாலகிருஷ்ணன் கூறுகையில், கொத்தமல்லி பொடி அமிலத்தன்மைக்கு மிகவும் பயனுள்ள மருந்தாக இருக்கும். காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட தொடங்குங்கள். இதை தொடர்ச்சியாக செய்தால் அமிலத்தன்மையை குறைக்கும். மேலும், வயிறு மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அமில ஏப்பம் வருவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
மூட்டு வலி
மூட்டு வலியை குறைப்பதற்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டு வலி உள்ளவர்கள் கொத்தமல்லியை சிறிது வறுத்து, அதில் சம அளவு வெந்தயம் மற்றும் ஓமம் கலந்து அந்த பொடியை சாப்பிடுங்கள். தொடர்ச்சியாக சாப்பிட்டு வர மூட்டு வலி குறையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ