இந்த Protein கொரோனாவைப் பந்தாடும், சிகிச்சைக்கான வழி பிறக்கும்: ஆய்வாளர்கள் உறுதி!!

முழு உலகமும் தற்போது கொரோனா வைரசால் ஏற்படும் அழிவை எதிர்த்துப் போராடுகிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரசுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 5, 2020, 08:43 PM IST
இந்த Protein கொரோனாவைப் பந்தாடும், சிகிச்சைக்கான வழி பிறக்கும்: ஆய்வாளர்கள் உறுதி!!
Zee Media

வாஷிங்டன்:  முழு உலகமும் தற்போது கொரோனா வைரசால் ஏற்படும் அழிவை எதிர்த்துப் போராடுகிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரசுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். இந்த முயற்சியில், விஞ்ஞானிகள் கொரோனா வைரசைக் கொல்லக்கூடிய ஒரு புரதத்தை தயாரிப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த புரதம் வைரஸுடன் பிணைக்கப்பட்டு உயிரணுக்களில் தொற்றுநோயைத் தடுக்கக்கூடும்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் கோவிட் -19 க்கு (Covid-19) எதிராக புதிய சிகிச்சை அல்லது தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கான புதிய பாதைத் திறக்கக்கூடும்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸால் (Corona Virus) ஏற்படும் SARS-CoV-2 வைரஸ், மனித உயிரணுக்களை ACE2 எனப்படும் ஏற்பி புரதத்தால் பாதிக்கிறது. இந்த புரதம் குறிப்பாக நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள், தமனிகள் மற்றும் குடல்களில் காணப்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ACE2 முக்கிய பங்கு வகிக்கிறது.

சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றப்பட்ட ஏ.சி.இ 2 புரதங்களை உருவாக்கி, இந்த புரதங்கள் கொரோனா வைரஸுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர்.

மூன்று மாற்றப்பட்ட புரதங்களின் கலவையானது மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான ACE2 ஐ விட கொரோனா வைரஸுடன் 50 மடங்கு வலுவாக தொடர்புடைய ஒரு ஏற்பியை உருவாக்கியது என்று அவர்கள் கண்டறிந்தனர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் புரோக்கோ கூறுகையில், 'ஏ.சி.இ 2 ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த போலி புரதம் தொற்றுநோயைத் தடுக்க மட்டுமல்லாமல், அசல் புரதத்தின் செயல்பாட்டை மீட்டெடுப்பதன் மூலம் கோவிட் -19 –க்கு நேரடியாக சிகிச்சையளிக்கும் வல்லமையும் படைத்தது. இருப்பினும், இது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்த புரதமாவது கொரோனாவுக்கு எதிரான ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்குமா என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ALSO READ: COVID-19 தோற்றத்தைக் கண்டறிந்த WHO ஆய்வு குழு?... ஆய்வாளர்கள் கூறுவது என்ன?