Corona Third Wave: காற்றுக்கு பிறகு நீரிலும் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 07:36 PM IST
  • கொரோனா வைரஸ் மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?
  • முதல் அலையின் வேகம் குறைவாக இருந்தது
  • இரண்டாம் அலை காற்றின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியது
Corona Third Wave: காற்றுக்கு பிறகு நீரிலும் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

புதுடெல்லி: 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தின் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. 

சீனாவில் தொடக்கத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உலகையே ஆட்டிப்படைத்து, லாக்டவுன் என்ற நிலைக்கு கொண்டு வந்து சர்வதேசங்களையும் முடக்கியது. 

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியப்பட்டதும் ஏற்பட்ட ஆசுவாசம், அதன் இரண்டாவது அலை ஏற்படுத்திய அதிர்வலைகளால் மட்டுப்பட்டது. தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையும் நிலையில், இன்னும் சில வாரங்களில் மூன்றாவது அலை உலகை தாக்கும் என்ற செய்திகள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது கவலைகளை அதிகரித்துள்ளது.

Read Also: கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்

சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

சபர்மதி ஆற்றில் இருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 549 சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது, மற்றும் 402 காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டவை 

தண்ணீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை, ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் நாவல் கொரோனா வைரஸின் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

நகரின் காங்க்ரியா (Kankria) மற்றும் சந்தோலா ஏரி (Chandola lake) ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read | Third wave: 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா- நிபுணர்கள் முக்கிய தகவல்

ஏரிகள் மற்றும் ஆறுகளில் SARS-CoV-2 இருப்பது ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என்று காந்திநகரின் ஐ.ஐ.டி.யில் பூமி அறிவியல் துறை பேராசிரியர் மனிஷ்குமார் தெரிவித்தார்.

இந்த குழு 2019, செப்டம்பர் 3 முதல் டிசம்பர் 29 வரை வாரம் ஒரு முறை நீர் மாதிரிகளை சேகரித்தது. சபர்மதி ஆற்றில் இருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 549 சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது, 402 காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.

வைரஸ் இயற்கை நீரில் அதிக காலம் வாழக்கூடும் என்று அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில், நதிகளில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் (COVID-infected patients) சடலங்கள் கண்டறியப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தண்ணீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

குறிப்பிடத்தக்க வகையில், நீரில் உள்ள COVID-19 கிளஸ்டர்களை அடையாளம் காண பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது.

Read Also | Biological-E தயாரிக்கும் 90% செயல்திறன் கொண்ட Corbevax விரைவில்..!!

2020 ஆம் ஆண்டில் குஜராத்திலும் இதே போன்ற ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐ.ஐ.டி-காந்திநகர், குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் (Gujarat Biotechnology Research Centre) மற்றும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் (ஜிபிசிபி) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் 2020 மே 8 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அகமதாபாதில் உள்ள பழைய பிரானா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து (WWTP) மாதிரிகள் மேற்கொண்டனர்.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சிவில் மருத்துவமனையிலிருந்து நாளொன்றுக்குகு 106 மில்லியன் லிட்டர் திரவ கழிவுகள் அல்லது கழிவுநீர் வந்து சேருகிறது.

வைரஸ் ஆர்.என்.ஏக்கள் (RNA) கழிவுநீர் மாதிரிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன மற்றும் SARS-CoV-2 முன்னிலையில் ஆர்.என்.ஏவின் ஆர்டி-பி.சி.ஆர் (RT-PCR analysis) பகுப்பாய்வு செய்யப்பட்டது. மே 8 மற்றும் மே 27 ஆகிய இரண்டிலும் WWTP மாதிரிகள் SARS-CoV-2 மரபணுக்களுடன் நேர்மறையானவை என்பதை முடிவுகள் காண்பித்தன.

வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் காணப்படுகிறதா என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தண்ணீரால் பரவலாம் என்ற எண்ணம் உருவாகிறது. அதுமட்டும் உண்மையென்றால், மூன்றாம் அலையின் வீரியமும், அது வாங்கும் பலி எண்ணிக்கையின் அளவும் அதிகமாக இருக்கும்.

Read Also | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News