Covid 19 Outbreak 2025 Guidelines In Tamil : 2019-2021ஆம் ஆண்டுகளில், கொரோனா எனும் கொடிய நோய், உலகையே ஆட்டிப்படைத்தது. உலகெங்கிலும் இந்த நோய் ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கியதோடு, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இப்போது வரை, சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு சிலர், இந்த நோய் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து, உடல் நிலை சோர்வுடன் காணப்படுகின்றனர். இந்த நோய், கிட்டத்தட்ட 229 நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா, இந்தியா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்த நோய் வேகமாக பரவியது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
மீண்டும் கொரோனா..!
ஆசிய நாடுகள் சிலவற்றில், மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட ஆரம்பித்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிலும், சிங்கப்பூர் மற்றும் சீனாவின் ஹாங்காங் ஆகிய இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறதாம்.
ஹாங்காங் நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர் ஆவ், இது குறித்து பேசுகையில், அந்த நகரில் இப்போது கொரோனாவின் செயல்பாடு அதிகமாக இருப்பதாக கூறினார். இந்த இடத்தில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாகவும், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரை, கடந்த மே மாதம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 28%ஆக இருந்திருக்கிறது. இதையடுத்து, இப்போது நோய் பாதிப்பு 14,200ஆக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30% ஆக அதிகரித்திருக்கிறதாம்.
பாதுகாப்பு வழிமுறைகள்..
- கொரோனா பரவலில் இருந்து நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க, நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
- அடிக்கடி சோப் அல்லது சானிடைஸர் உபயோகித்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- வாயையும், மூக்கையும் மூடும் அளவிற்கு மாஸ்க் உபயோகிக்க வேண்டும்.
- தும்மும் போதும், இரும்மும் போதும், வாயை கை முட்டியால் மூட வேண்டும்.
- மாஸ்கை அப்புறப்படுத்தும் போதும் அதை புதிதாக பயன்படுத்தும் போதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
- பிறரிடம் இருந்து 3 அடி தள்ளியே இருக்கவும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாதவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
- அதிகம் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? இந்த பானங்களை குடித்தால் போதும், உடனடி நிவாரணம்
மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்த பிரச்சனையா? இந்த மாற்றங்கள் பயனளிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









