மாரடைப்பு அபாயம் நீங்க... வீட்டில் தினம் 3 நிமிடம் சிறுசிறு வேலைகளை செய்தால் போதுமாம்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் இளைஞர்கள் கூட மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கும் விஷயமாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2025, 05:52 PM IST
  • உடற்பயிற்சியைச் செய்ய சிரமப்படுபவர்களுக்கு, அன்றாட உடல் செயல்பாடுகள் மூலம் இருதய ஆரோக்கியம் சிறப்பாக மேம்படுகிறது
  • இதயம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
  • சிறு சிறு வேலைகள் செய்ய முயற்சிப்பது முக்கியம்.
மாரடைப்பு அபாயம் நீங்க... வீட்டில் தினம் 3 நிமிடம் சிறுசிறு வேலைகளை செய்தால் போதுமாம்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் இளைஞர்கள் கூட மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கும் விஷயமாகும். இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது தொடர்பான ஒரு ஆய்வில், முதியவர்கள் சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் 3 நிமிடங்கள் மிதமான அளவிலான உடல் பயிற்சி அல்லது செயல்பாடு போதுமானதாக இருக்கும் என்பது தெரிய் வந்துள்ளது. மக்கள் வயதாகும்போது, ​​பலர் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை, இது இதயம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதைக் முந்தைய ஆய்வுகள், காட்டுகிறது.

Add Zee News as a Preferred Source

ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்

புதிய ஆய்வில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீட்டு வேலைகளைச் செய்வது அல்லது மளிகைப் பொருட்களை வாங்குவது போன்ற சிறிய அளவிலான செயல்பாடுகள் எனப்படும் எளிய செயல்பாடுகள் கூட மாரடைப்பு அபாயத்தை நீக்கி இதய ஆரோக்கியத்தை வலுவாக்க போதுமானதாக இருக்கலாம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளனர். மிதமான உடல் செயல்பாடுகள் (IPA) என்பது ஓய்வு நேரம் போக, மீதமுள்ள நேரத்தில், வீட்டில் வேலைகள் செய்வதை உள்ளடக்கியது. உணவு தயாரிப்பது, வீட்டை சுத்தம் செய்தல், புல்வெளியை வெட்டுதல் அல்லது தோட்டக்கலை ஆகியவை இதில் அடங்கும்.

ஆராய்ச்சியின் நோக்கம்

"வலுவான அல்லது மிதமான தீவிரம் கொண்ட எந்தவொரு தினசரி வேலையில் ஈடுபடுவதற்கும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு நேரடி தொடர்பு உள்ளது" என்று சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். "எங்கள் கண்டுபிடிப்புகள், குறிப்பாக உடற்பயிற்சியைச் செய்ய சிரமப்படுபவர்களுக்கு, அன்றாட உடல் செயல்பாடுகள் மூலம் இருதய ஆரோக்கியம் சிறப்பாக மேம்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார். சர்குலேஷன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மணிக்கட்டில் செயல்பாட்டு கண்காணிப்பு மானிட்டர்களை அணிந்திருந்த மற்றும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் என்று சுயமாக அடையாளம் காணப்பட்ட 24,139 பேரின் தரவை குழு பகுப்பாய்வு செய்தது

ஆராய்ச்சி குறித்த விபரம்

மணிக்கட்டு அணிந்த மானிட்டர்கள் வழக்கமான மிதமான வேலைகளில் அல்லது செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காட்டியவர்களுடனும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுறுசுறுப்பாக இருந்தவர்களுடனும் ஒப்பிடப்பட்டனர். மிதமான சுறுசுறுப்பான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது இருதய நோய் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக முடிவுகள் காண்பித்தன.

3 நிமிட வீட்டு வேலையின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

குறிப்பாக, தினமும் குறைந்தது மூன்று நிமிடங்கள் வீட்டு வேலை செய்வதில் மிதமான சுறுசுறுப்புடன் இருப்பவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது பிற இருதய பாதிப்புகள் அபாயத்தைக் குறைப்பதாக குழு கண்டறிந்தது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு வேலைகள் செய்ய முயற்சிப்பது முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News