High Blood Sugar Symptoms: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், பல வித நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கிறது. அவற்றில் மிக தீவிரமான நோய் நீரிழிவு நோய். உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எணணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் மாறி வருகிறது.
இந்நிலையில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபருக்கும் நீரிழிவு நோய் இருந்தால் சிறந்த ஆரோக்கியத்திற்காக சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கம், அதிக சர்க்கரை (ஹைப்பர் கிளைசீமியா) ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
தேசிய சுகாதார நிறுவனங்களின்படி, ஹைப்பர் கிளைசீமியா என்பது வெறும் வயிற்றில் எடுக்கப்படும் டெஸ்ட் ஆகும். இவை 125 மி.கி/டெ.லிட்டருக்கும் அதிகமாகவும், உணவு உண்ணப் பிறகு 2 மணி நேரத்திற்குப் பிறகு 180 மி.கி/டெ.லிட்டருக்கும் அதிகமாகவும் இருக்கும்போது ஏற்படும். இந்தப் பிரச்சினையின் மிக முக்கியமான விளைவு நீரிழிவு நோய் என்றாலும், இதை சரியான முறையில் கட்டுப்படுத்தவில்லை என்றால் மற்ற கடுமையான நோய்கள் ஏற்படத் தொடங்கும்.
உடல் பருமன்: அதிக சர்க்கரை உடலில் இருந்தால் அவை உடலில் கொழுப்பாக சேரத் தொடங்கும். உடலில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும்போது, அது கூடுதல் கலோரிகளாக கொழுப்பாக மாறுகிறது.
அதிக எல்டிஎல் கொழுப்பு: அதிக சர்க்கரை இரத்தத்தில் LDL (கெட்ட கொழுப்பு) அளவு அதிகரிக்கக்கூடும், இது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த நிலை தமனி அடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம்: ஹைப்பர் கிளைசீமியா உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும. அதிக சர்க்கரை இரத்த நாளங்களின் சுவர்களில் வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும், இதனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை மீதான அழுத்தம் ஏற்பட்டு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.
புற்றுநோய்: அதிக சர்க்கரை உடலில் ஏற்பட துவங்கினால் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், அவை செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அல்சைமர்: அதிக சர்க்கரை மூளை செல்களை மோசமாக பாதிக்க தொடங்கும். மேலும் மூளையை சேதப்படுத்தக்கூடும். இதனால் அல்சைமர் போன்ற மன நோய்களுக்கு வழிவகுக்கும்.
கொழுப்பு கல்லீரல் நோய்: ஹைப்பர் கிளைசீமியாவின் மற்றொரு கடுமையான விளைவு கல்லீரலில் உள்ளது. அதிக சர்க்கரை கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்கும். இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) ஏற்படும். இந்த நிலையில், கல்லீரலில் கொழுப்பு சேர்வது கல்லீரலின் செயல்பாட்டைப் பாதிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









