Side Effects of Black Pepper: நமது இந்திய சமையலறைகளில் நாம் பல வித மசாலாக்களை பயன்படுத்துகிறோம். இவை நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. நாம் பரவலாகப் பயன்படுத்தப்படும் நன்மை பயக்கும் மசாலாப் பொருட்களில் கருப்பு மிளகும் ஒன்று.
கருப்பு மிளகை உணவு வகைகளில் சேர்ப்பது, உணவின் சுவையையும், மணத்தையும், நிறத்தையும் மேம்படுத்துவதோடு, உணவை ஆரோக்கியமானதாகவும் மாற்ற உதவுகிறது. இருப்பினும், கருப்பு மிளகை அதிக அளவில் உட்கொள்வது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், கருப்பு மிளகை ஏன் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதையும், அதனால் வரக்கூடிய பக்க விளைவுகளையும் பற்றி இங்கே விளக்குகிறார்.
கருப்பு மிளகு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
வயிற்றுப் பிரச்சனைகள் (Stomach Problems)
கருப்பு மிளகில் உள்ள கேப்சைசின் வயிற்று வலி, எரியும் உணர்வு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல் காரணியாக செயல்படுகிறது. கருப்பு மிளகை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றுப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒவ்வாமை எதிர்வினைகள் (Allergy)
சிலருக்கு கருப்பு மிளகிற்கு ஒவ்வாமை ஏற்படலாம். இது தோல் வெடிப்புகள், தடிப்புகள் அல்லது பிற விரும்பத்தகாத எதிர்வினைகளை ஏற்படுத்தும். அத்தகைய நபர்கள் கருப்பு மிளகைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இதை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
இதய பிரச்சனைகள் (Heart Problems)
அதிக அளவு கருப்பு மிளகை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆபத்தான பக்க விளைவுகளாக கருதப்படுகின்றன. இந்தியாவில் சமீப காலங்களில் இதய நோய் பாவலாக காணப்படுவதால், இதில் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பாதுகாப்பு அடுக்கின் இழப்பு (Damage in Protective Layers)
கருப்பு மிளகை அதிகமாக உட்கொள்வது வாயின் தோலை எரிச்சலடையச் செய்து, பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்படலாம். அதாவது கருப்பு மிளகை அதிகமாக உட்கொள்வது வாய் ஆரோக்கியத்திற்கும் பிரச்சனைகளை ஏற்படுத்யும்.
இவை தவிர கருப்பு மிளகு அதிக அளவில் நுரையீரலுக்குள் சென்றால் அது ஆபத்தாகலாம். கருப்பு மிளகு சில சமயங்களில் சில மருந்துகளுடன் சேரும்போது எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்... மருத்துவர் கூறும் முக்கிய காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









