மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்

வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்த்த, ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ் வகைகள், சாக்லேட்டுகள், சர்க்கரை அதிகம் சேர்த்த செயற்கை குளிர் பானங்கள், இனிப்புகள் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மூளை ஆரோக்கியம் முதல் இதயம் குடல் என அனைத்தையும் பாதிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2025, 09:17 PM IST
  • வெள்ளை சர்க்கரை கலோரிகள் அதிகம் கொண்டது. அதில் மருந்துக்கு கூட ஊட்டச்சத்து இல்லை.
  • மூளை ஆரோக்கியம் முதல் இதயம் குடல் என அனைத்தையும் பாதிக்கும் சர்க்கரை.
  • அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்வதால் மூளை செயல்பாடு பாதிக்கப்படலாம்.
மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்

இனிப்பான உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும், ஏதோ ஒரு சாக்கு போக்கை கண்டுபிடித்து, இன்றைக்கு மட்டும் சாப்பிடலாம் என்று முடிவெடுக்கும் பலரை பார்த்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக வெள்ளை சர்க்கரை கலோரிகள் அதிகம் கொண்டது. அதில் மருந்துக்கு கூட ஊட்டச்சத்து இல்லை.

Add Zee News as a Preferred Source

வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்த்த, ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ் வகைகள், சாக்லேட்டுகள், சர்க்கரை அதிகம் சேர்த்த செயற்கை குளிர் பானங்கள், இனிப்புகள் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மூளை ஆரோக்கியம் முதல் இதயம், குடல் என (Health Tips) அனைத்தையும் பாதிக்கும்.

மூளை ஆரோக்கியம்

அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்வதால் மூளை செயல்பாடு பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மூளை ஓட்டம் குறைவதற்கும், மறதி நோய் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கு கூடும் என ஆராய்ச்சிகள் பல காட்டுகின்றன. எனவே சுறுசுறுப்பான மூளைக்கு, சர்க்கரையை அளவோடு சாப்பிட வேண்டும்.

எலும்பு ஆரோக்கியம்

அளவிற்கு அதிக சர்க்கரை, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, ஆஸ்டியோ புரொசிஸ், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எலும்புகள் பலவீனம் அடைவதால், முதுமை காலத்தில், நடக்கவும் நிறக்கவும் முடியாத நிலை கூட ஏற்படலாம். எனவே எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்கவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

குடல் ஆரோக்கியம்

அளவிற்கு அதிகமான சர்க்கரை வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனையை அதிகரிக்கிறது. ஏனெனில் இது குடலுக்கு தீங்கை விளைவிக்கும், கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் செரிமான சக்தி பாதிக்கப்படும். இதனால் குடலில் வீக்கம் ஏற்படுவதோடு, ஊட்டச்சத்து குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை ஏற்படக்கூடும். வாயு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

நல்ல தூக்கத்திற்கு குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். எனவே செரிமான சக்தி பாதிக்கப்படும் போது, தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படுகிறது. இனிப்புகளை அதிகம் சாப்பிடும் பழக்கம், ஒரு போதை போல் மாறி, மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இதய ஆரோக்கியம்

வெள்ளை சர்க்கரையில் இருப்பது அனைத்தும் கலோரிகள் மட்டுமே. ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. இதனால் இதய ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால், மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு பெருமளவு அதிகரிக்கிறது. இது இதய நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்றால், சர்க்கரையை முற்றிலுமாக விளக்குவது நல்லது. சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள்வதால், உங்கள் எடை இழப்பு முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும். இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பாதியாக குறைக்க ஆவது முயல வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News