கோடை காலம் தொடங்கிவிட்டதால், கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. அவை நம்து இரத்தத்தை உறிஞ்சி வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், நமது உடலில் பல வகையான தொற்றுக்களையும் ஏற்படுத்துகின்றன. இதனால் பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொசுக்களைத் தவிர்ப்பது முக்கியம்.
கொசுக்களை விரட்ட, பலர் பொதுவாக சுருள்கள், வேப்பரைசர்கள், கிரீம்கள் மற்றும் ரோல் - ஆன்கள் போன்ற பல வகையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை கொசுக்களை விரட்டுவதில் பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொசு விரட்டிகளில் உள்ள ஆபத்தான இரசாயனங்கள்
அல்லெத்ரின்
அல்லெத்ரின் என்பது கொசு விரட்டி சுருள்கள் மற்றும் கொசு விரட்டி ஆவியாக்கிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை பூச்சிக்கொல்லியாகும். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இது கொசுக்களை விரட்டுவதில் பயனுள்ளதாக இருந்தாலும், மூடிய அறையில் நீண்ட நேரம் பயன்படுத்தும்போது, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது தலைவலி, தலைச்சுற்றல், நுரையீரல் பாதிப்பு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
டீட்
கொசு விரட்டிகளில் டீட் DEET என்னும் ராசாயனமும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரையிலான குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை. அதிகப்படியான DEET ரசாயனத்திற்கு வெளிப்படும் போது சருமம் எரிச்சல், வறட்சி மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கூட ஏற்படுத்தும்.
கொசு விரட்டி கிரீம்கள் மற்றும் ரோல் - ஆன்களின் தீமைகள்
1. அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை, தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும்.
2. இது சிலருக்கு வீக்கம், எரிச்சல் மற்றும் கடுமையான எரியும் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
3. நீடித்த பயன்பாடு சருமத்திலிருந்து ஈரப்பதத்தை நீக்கி, சருமத்தை வறண்டு, விரிசல் அடையச் செய்யும்.
4. சில கிரீம்களின் எண்ணெய் சருமத்தின் துளைகளை அடைத்து, முகப்பருவை ஏற்படுத்தும்.
5. அது தற்செயலாக கண்களுக்குள் சென்றாலோ அல்லது அதன் வாசனை சுவாசத்தின் மூலம் உடலுக்குள் நுழைந்தாலோ, அது தீங்கு விளைவிக்கும்.
6. இது குழந்தைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









