குழந்தைகளுக்கு இளம் வயதில் தொப்பை வருவதால் ஏற்படும் ஆபத்துகள்..!

Parenting Tips : குழந்தைகளுக்கு இளம் வயதில் தொப்பை ஏன் வருகிறது, தொப்பை வருவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து பெற்றோர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 23, 2025, 07:18 AM IST
  • குழந்தைகளுக்கு தொப்பை வர காரணம்
  • தொப்பையால் வரும் இளம் வயது ஆபத்துகள்
  • பெற்றோர்கள் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியவை
குழந்தைகளுக்கு இளம் வயதில் தொப்பை வருவதால் ஏற்படும் ஆபத்துகள்..!

Parenting Tips Tamil : இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் கூட தொப்பையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கொழுகொழு என இருக்கிறார்கள் என எல்லோரும் ரசிப்பார்கள். உண்மையில் குழந்தைக்கு அது ஆரோக்கிய பிரச்சனை. நிச்சயம் இதுகுறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். இளம் வயதிலேயே தொப்பை இருந்தால் அந்த குழந்தை பின்நாளில் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள நேரிடும். அதற்கு முதலில் குழந்தைகளுக்கு தொப்பை வர காரணம் என்ன?, அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் குழந்தைகளின் தொப்பையை சரி செய்வது எப்படி? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

குழந்தைகளுக்கு தொப்பை வர காரணம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள்

1. குழந்தைகளுக்கு தொப்பை வர காரணம்

குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை தவறான உணவு பழக்கம். அதிக கலோரி, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஜங்க் ஃபுட், கார்ப்பனேட்டட் பானங்கள், மிட்டாய் போன்றவை தொப்பைக்கு முக்கிய காரணம். குழந்தைகள் உடல் பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபடாமல், தொலைக்காட்சி, கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவது அடுத்த காரணம். மேலும், குடும்பத்தில் உடல் பருமன் இருந்தால், குழந்தைகளுக்கும் தொப்பை வர வாய்ப்பு அதிகம். போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் தொப்பை வரும்.

2. குழந்தைகள் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது?

குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். தொப்பை வராமல் தடுக்க, சில உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நிறைந்த பானங்கள். சோடா, பாக்கெட் பழச்சாறுகள் பானங்கள் போன்றவை. அடுத்ததாக ஜங்க் ஃபுட். பிஸ்ஸா, பர்கர், பிரைடு உணவுகள், சிப்ஸ், மிட்டாய் போன்றவை சாப்பிடக்கூடாது. பாக்கெட் உணவுகள் குறிப்பாக இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், பிரட் மற்றும் பேக்கரி பொருட்கள் சாப்பிடவே கூடாது. பிரைடு சிக்கன், பிரைடு பொட்டேட்டோ, அதிக எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

3. இளம் வயதில் தொப்பை வந்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்

இளம் வயதில் தொப்பை வருவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். தொப்பை காரணமாக டைபீஸ் 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொப்பை காரணமாக குழந்தைகள் சோர்வாகவும், உடல் திறன் குறைந்தும் இருக்கும். உடல் பருமன் காரணமாக குழந்தைகள் தன்னம்பிக்கை இழப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். சில குழந்தைகளுக்கு உறக்கத்தில் சுவாச பிரச்சனைகள் (Sleep Apnea) ஏற்படலாம்.

4. தொப்பை வராமல் தடுப்பது எப்படி?

ஆரோக்கியமான உணவு தேவை. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகளை உண்ண வழக்கமாக்குங்கள். குழந்தைகள் தினமும் குறைந்தது 1 மணி நேரம் உடல் பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். போதுமான உறக்கம் (8-10 மணி நேரம்) பெறுவது முக்கியம். சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்கவும்.

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். தொப்பை வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் பயிற்சியை வழக்கமாக்குவது அவசியம். குழந்தைகளின் உடல் பருமன் மற்றும் தொப்பை குறித்து கவனம் செலுத்தினால், அவர்கள் நீண்ட கால ஆரோக்கியத்தை பெற முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் சிம்பிளான உணவுகள்

மேலும் படிக்க | மந்தமான மூளையும் புத்துணர்ச்சி பெறும்... நினைவாற்றலை பெருக்கும் சில அற்புத மூலிகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News