Dates for Diabetes: பேரீச்சம்பழம் என்பது பாலைவனத்தில் விளையக்கூடியது. இது வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில், குறிப்பாக பாலைவனங்களில் வளரும் ஒரு பழமாகும். இது இயற்கையான இனிப்பை கொண்டிருகும் இந்த பழ,த்தை நோன்பு முடிந்த பிறகு பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதவிர, திருவிழாக்களில் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில் பலர் இதை தினமும் சாப்பிடுகின்றனர். பேரீச்சம்பழம் சர்க்கரை நிறைந்த ஒரு பழமாகும், இது நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன. சந்தையில் பல வகையான பேரீச்சம்பழங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் சில பேரீச்சம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு இயல்பான நிலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதாவது குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பேரீச்சம்பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கும்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, குறைந்த கிளைசெமிக் கொண்ட சர்க்கரை அளவை அதிகரிக்காத 5 வகையான பேரீச்சம்பழங்கள் உள்ளன, அவை நார்ச்சத்து நிறைந்தவை, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. அவை குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்குகின்றன. இந்த பேரீச்சம்பழங்கள் அழற்சியை கட்டுப்படுத்துகின்றன, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் இல்லை. சர்க்கரை நோயாளிகள் இந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு உடல் பலவீனத்தை குறைக்கலாம்.
1. அஜ்வா பேரீச்சம்பழம் (Ajwa Dates)
இது சிறிய அளவிலான, கருப்பு நிற பேரீச்சம்பழம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. கொழுப்பு குறைவாகவும், கொலஸ்ட்ரால் இல்லாததாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது, இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.
2. கிமியா பேரீச்சம்பழம் (Kimia Dates)
இது மிகவும் மிருதுவான மற்றும் இயற்கையான இனிப்பு கொண்ட பேரீச்சம்பழம். இதில் சர்க்கரை அளவு மிதமானது. நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக்கும். குளுக்கோஸ் மெதுவாக வெளியிடப்படுவதால், சர்க்கரை அளவு திடீரென உயராது.
3. மெட்ஜூல் பேரீச்சம்பழம் (Medjool Dates)
இது மொராக்கோவில் இருந்து தோன்றியது. பெரிய அளவிலான, கேரமல் போன்ற சுவையுடைய பேரீச்சம்பழம். ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக்கும். இது மிகவும் இனிப்பு கொண்டது, எனவே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புவோர் குறைந்த அளவில் சாப்பிடலாம்.
4. கதராவி பேரீச்சம்பழம் (Khadrawi Dates)
இது மென்மையான மற்றும் ஈரப்பதமான பேரீச்சம்பழம். மெட்ஜூல் பேரீச்சம்பழத்தை விட குறைந்த சர்க்கரை அளவு கொண்டது. இயற்கையான இனிப்பு விரும்புவோருக்கு ஏற்றது. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக விரைவில் கெட்டுப்போகும்.
5. டெக்லெட் நூர் பேரீச்சம்பழம் (Deglet Noor Dates)
இது ஈரானில் அதிகம் பயிரிடப்படும் பேரீச்சம்பழம். இலேசான இனிப்பு சுவை கொண்டது. ஆற்றல் மூலம் கொண்டவை என்பதால் சிற்றுண்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஈரானில் இருந்து இதை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.
பேரீச்சம்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
குறைந்த அளவில் சாப்பிடவும்: ஒரு நாளைக்கு 2-3 பேரீச்சம்பழங்களை மட்டும் சாப்பிடவும். புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்புடன் சாப்பிடவும்: பேரீச்சம்பழத்தை நட்டுகள், விதைகள் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவும்: ஓட்ஸ் அல்லது முழு தானியங்களுடன் பேரீச்சம்பழத்தை சேர்த்து சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்: சர்க்கரை அல்லது சிரப்பில் ஊறவைத்த பேரீச்சம்பழங்களை தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | தினமும் இதை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
மேலும் படிக்க | குழந்தைக்கு இன்னும் ஒரு வயதாகவில்லையா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









