இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தொலைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல் கேம் முகம் உடல் மற்றும் மூளை சார்ந்த பிரச்சினைகளை அதிகம் ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆன்லைன் அல்லது மொபைல் கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாகி பல மணி நேரங்கள் அதில் நேரத்தை செலவிடுவதால், மூளை பாதிப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடலாம். ஏனெனில் மணிக்கணக்கில் மொபைல் கேம்களில் நேரத்தை செலவிடும் போது, மூளைக்கு ஓய்வே கிடைப்பதில்லை (Brain Health). அதோடு உறங்கும் போது கூட, விளையாட்டை பற்றிய சிந்தனை தான் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.
ஆன்லைன் கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகி போனால், அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு சென்று விடுகிறது. இது விரல் நரம்புகளின் பாதிப்பு முதல் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்படுவது வரை பலவித பிரச்சனைகள் உண்டாகின்றன. அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த 19 வயது சிறுவன் ஒருவன், மொபைல் கேம் விளையாட்டிற்கு அடிமையாகி, தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக அதில் செலவிட்டதால், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதோடு, சிறுநீர்ப்பை தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது. முதுகெலும்பு வளைந்து போய் விட்டதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் காரணமாக ஏற்பட்ட முதுகெலும்பு காசநோய்
ஆன்லைன் கேமிங் விளையாட்டில் மணிக்கணக்காக நேரத்தை செலவிட்டதால், அவருக்கு முதுகெலும்பு காசநோய் ஏற்பட்டு, நடக்கவும் சிறுநீர் கழிக்கவும் கூட பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. இந்திய முதுகெலும்பு காய மையத்தின் மருத்துவர்கள், அவரது முதுகுத்தண்டில் கடுமையான சிதைவு ஏற்பட்டுள்ளதை கவனித்து சிகிச்சை அளித்தனர்.
திருகுகளைப் பொருத்தி முதுகெலும்பை சீரமைக்க அறுவை சிகிச்சை
ஆன்லைன் கேம் மோகம் காரணமாக, மணி கணக்கில் விளையாடியதால், முதுகு தண்டு வளைந்து போய் இருந்த நிலையில், நவீன தொழில்நுட்பம் மூலம், ஸ்க்ரூ எனப்படும் திருகுகலை பொருத்தி, முதுகெலும்பை சீர் செய்தனர். அறுவை சிகிச்சை பெற்ற சில நாட்களுக்குள், சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றத்தை காண முடிந்தது. அவரது சிறுநீர்ப்பையும் சீரடைந்து, அவர் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
முதுகுத்தண்டு மீதான அழுத்தம் ஏற்படுத்திய பாதிப்பு
மணிக்கணக்கில் மொபைல் கேம் விளையாடியதால், முதுகுத்தண்டின் மீது பாதிப்பு ஏற்பட்டு, இந்த நிலை உருவானதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு மொபைல் கேம் காரணமாக, மூளை ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை காண்பதால் கண் பார்வை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்தனர்.
பிசியோதெரபி மற்றும் கவுன்சிலிங் சிகிச்சை
மொபைல் விளையாட்டிற்கு அடிமையாகி, முதுகு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாக பிசியோதெரபி மற்றும் வீடியோ கேம் முகத்தில் இருந்து விடுபட ஆலோசனை ஆகியவை வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப இயலும் என்று கூறுகின்றனர்.
குழந்தைகள் மொபைல் கேம் விளையாடாமல் தடுக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
இன்றைய துரித கதியிலான காலகட்டத்தில், குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த பெற்றோர்களுக்கு நேரமில்லாமல் போவது, துரதிர்ஷ்டவசமானது. எனவே குழந்தைகள், தங்கள் வீட்டில் இல்லாத போது என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணித்து, அவர்களை அன்புடனும் அதே சமயத்தில் கண்டிப்புடனும் நடத்தி, அவர்களை சரியான திசையில் இட்டுச் செல்வது, குழந்தைகள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். இது போன்ற ஆபத்தான நிலைகளையும் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | சுகர் லெவலை குறைக்கும் பிரியாணி இலை டீ: இன்னும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









