Diabetes Control Tips: மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், நீரிழிவு நோயாளிகளுக்கு பல சவால்களையும் ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. மேலும் தொற்று அபாயமும் அதிகமாகிறது. ஆகையால் மழைக்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது
பாதங்களின் பராமரிப்பு
மழையில் கால்களைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். மழையில் காலணிகள் மற்றும் செருப்புகள் நனைவது கால்களில் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது ஆபத்தானது. இதுபோன்ற சூழ்நிலையில், உடனடியாக உங்கள் கால்களை நன்கு கழுவி உலர வைக்கவும். விரல்களுக்கு இடையில் இருக்கும் ஈரப்பதத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தவும்.
உணவில் கவனம்
மழைக்காலங்களில் உங்கள் உணவில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். இந்த பருவத்தில் பக்கோடாக்கள், சமோசாக்கள் போன்ற வறுத்த பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இந்த உணவுகள் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கின்றன. இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. திறந்தவெளியிலும் சாலையோரத்திலும் விற்கப்படும் வெளிப்புற உணவை முற்றிலும் தவிர்க்கவும். இது ஃபுட் பாய்சனிங்கிற்கு வழி வகுக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
இந்தப் பருவத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியம். தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாது. உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். இந்த பருவத்தில் நன்கு வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடிக்க முயற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சி
மழைக்காலத்தில் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த பருவத்தில் வீட்டிலேயே யோகா போன்ற லேசான பயிற்சிகளை செய்யலாம். உடல் செயல்பாடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
தொடர்ச்சியான இரத்த சர்க்கரை சோதனை
நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் காரணமாக, இந்த பருவத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க, உங்கள் இரத்த சர்க்கரையை தொடர்ந்து செக் செய்து மருத்துவர் கொடுக்கும் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றவும்.
தூய்மை
மழைக்காலத்தில் தூய்மையில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த பருவத்தில், சளி-இருமல் மற்றும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது சில நேரங்களில் சர்க்கரை அளவை பாதிக்கும். உங்களைச் சுற்றி தண்ணீர் தேங்க அனுமதிக்காதீர்கள், இதனால் கொசுக்களால் பரவும் நோய்களையும் தவிர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... இளநீர் என்னும் எனர்ஜி போஸ்டர்
மேலும் படிக்க | நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் 15 கிலோ குறைந்த மிருணாள் தாகூர்! ‘இதை’ குடித்தாராம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ