Blood Sugar Level: நீரிழிவு நோயாளிகளில் 22% பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

Diabetes Control: இந்த நவீன யுகத்தில் பல வித வாழ்க்கை முறை நோய்கள் மனித குலத்தை வாட்டி வதைக்கின்றன. இவற்றில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால் உடலின் பிற பாகங்களிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மனித உடல் ஒரு புதிர் போன்றது. அது எண்ணற்ற மர்மங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் பல இடங்களில் தெரிகின்றது.
கல்லீரல் ஏறக்குறைய ஒரு கால்பந்து அளவு இருக்கும். இது சுமார் 1.5 கிலோகிராம் எடை கொண்டது. இது மனித உடலுக்காக பல வித பணிகளை செய்கிறது. ஆனால், இவற்றுக்கான ஆபத்தும் நம் உடலிலேயே இருக்கின்றது. நம் உடலில் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாகச் செயல்படும் குறிப்பிட்ட கூறுகள் உள்ளன. அத்தகைய குறுகளில் ஒன்றுதான் "வெள்ளை விஷம்" என்று கூறப்படும் வெள்ளை சர்க்கரை. சர்க்கரை அளவு அதிகமாவது கல்லீரல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றது.
கல்லீரல் பாதிப்பு மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக சர்க்கரை குழந்தைகளின் மூளையைத் தாக்கி, அவர்களை ADHD பாதிப்புக்கு ஆளாக்குகிறது. இது பெரியவர்களின் மூளையைத் தாக்கும்போது, டிமென்ஷியா போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால், கிளௌகோமா என்ற ஒரு அபாயகரமான கண் நோயும் ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி, பற்களில் ஏற்படும் சொத்தைகளுக்குப் பின்னாலும் இந்த சர்க்கரையே முதன்மைக் காரணமாக உள்ளது.
தூக்கமின்மைக்கும், இளவயதிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஆகியவைக்கும் சர்க்கரை ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், இரத்தச் சர்க்கரை அளவு மிகவும் உயர்ந்தால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. சுருக்கமாக, தினசரி அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் முழு உடலுக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்களில் சில சிறிய மாற்றங்களை செய்தால், இந்த தீய விளைவுகளை தவிர்க்க முடியும். உணவு கட்டுப்பாடு, யோகா பயிற்சிகள், உடற்பயிற்சி ஆகியவை இந்த "வெள்ளை விஷத்தின்" விளைவுகளை போக்கி, இதயம், மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும்.
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50% பேர் தங்கள் நிலை குறித்து அறியாமல் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், நோயாளிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளது.
மூளை
கண்கள்
இதயம்
கல்லீரல்
சிறுநீரகங்கள்
மூட்டுகள்
நீரிழிவு நோயாளிகளுடன் இதய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளிடையே இதய நோய் அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 22% பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
- அதிகப்படியான தாகம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிகப்படியான பசி
- உடல் எடை குறைதல்
- எரிச்சல் உணர்வு
- களைப்பு
- பலவீனம்
- பார்வை மங்குதல்
இயல்பான இரத்த சர்க்கரை அளவுகள்
உணவுக்கு முன்: 100 mg/dl-க்கு குறைவாக
உணவுக்குப் பின்: 140 mg/dl-க்கு குறைவாக
நீரிழிவு முன்நிலை (Pre-diabetes)
உணவுக்கு முன்: 100–125 mg/dl
உணவுக்குப் பின்: 140–199 mg/dl
நீரிழிவு நோய்
உணவுக்கு முன்: 125 mg/dl-க்கு அதிகமாக
உணவுக்குப் பின்: 200 mg/dl-க்கு அதிகமாக
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான வழிமுறைகள்
- வெள்ளரிக்காய், பாகற்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றின் சாறு கலவையை அருந்தலாம்.
- சீந்தில் கஷாயம் அருந்தலாம்.
- தினமும் காலையில் வெந்தய நீர் குடிக்கலாம்.
- மண்டூகாசனம் மற்றும் யோகமுத்ராசனம் ஆகியவை நன்மை பயக்கும் யோகாசனங்களாகும்.
- நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவை அவசியம்.
- உடல் எடையில் கட்டுப்பாடு தேவை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
1. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க முக்கிய காரணம் எது?
வெள்ளை சர்க்கரை உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
2. நீரிழிவு நோய்க்கும் இதய நோய்க்கும் தொடர்பு உண்டா?
ஆம், நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளிடையே இதய நோய் அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 22% பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
3. இந்தியாவில் தற்போது எத்தனை பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!