)
சர்க்கரை நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம் கண்கள் இதயம் என உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சில தீவிர நிலைகளில், உறுப்புகள் செயல் இழப்பும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க, மாத்திரை மருந்துகளை தவறாமல் சாப்பிடுவது உடன், உணவு விஷயத்திலும் அதிக கவனம் தேவை.
சர்க்கரை நோயாளிகள், இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. சர்க்கரை மட்டும் அல்ல, வேறு சில உணவுகளும், நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. எனவே இனிப்புகள் நிறைந்த, கேக் வகைகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள், சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்த இனிப்பு வகைகள் ஆகியவற்றை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கே கொடுக்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட சில உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.
நீரழிவு நோயாளிகள் டயட்டில் சேர்க்கக்கூடாத சில உணவுகள்
மைதா மாவினால் ஆன உணவுகள்
மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரட், பாஸ்தா, பிஸ்கட், பரோட்டா ஆகிய உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சுகர் லெவலை எகிற வைத்து, உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள், இதற்கு பதிலாக, பல தானிய ரொட்டி, ஓட்ஸ் வகைகள் மற்றும் பிற தானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறமை கொண்டவை.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்
ரெடி டு ஈட் வகை உணவுகள், ஆரோக்கியமானவை அல்ல. நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க, அவற்றில் சேர்க்கப்படும் பிரிசர்வேடிவ்கள் மற்றும் ரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. அதோடு அதில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் இருக்கும். இதனை அடிக்கடி உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரெஷ் உணவுகள் எப்போதுமே ஆரோக்கியமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள்
பொதுவாகவே எண்ணெய் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. அதிலும் எண்ணெயில் பொரித்த பஜ்ஜி பக்கோடா சிப்ஸ் போன்றவை சாப்பிட சுவையாக இருந்தாலும், அவற்றில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் இருப்பதால், உடலில் சர்க்கரை கொழுப்பு ஆகிய இரண்டும் அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குவதோடு, இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
ஆரோக்கிய மற்றும் உணவு பழக்கம் வழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை தான், பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள நிலையில், உணவில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுவையான உணவுகளை சாப்பிட விரும்புவது இயல்புதான். அதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் அதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. இதனை உணவில் எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்வதால் ஆபத்து இல்லை. இதனை வழக்கமாக பின்பற்றுவது தான் தவறு.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ