இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கவலை அளிக்கும் விஷயமகா உள்ளது. நீரிழிவு நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், இது உடலின் மற்ற பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது அவசியம் தான். எனினும், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தினால், மருந்துகளின் அளவை மெதுமெதுவாக குறைத்து விடலாம். மருந்துகளின் பக்க விளைவுகள் உடலின் மற்ற பாகங்களை பாதிக்கலாம் என்பதால், மருந்துகளை குறைப்பது எப்போதுமே நல்லது.
நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும், சர்க்கரை நோய் வரமால் தடுக்கவும், உணவு முறையில் சில முக்கியமான மற்றும் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் பாக்யேஷ் குல்கர்னி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்குகிறார். நீரிழிவு நோய் ஒரு வாழ்க்கை முறை நோய். எம்ஆர்பிஎஸ் ஃபார்முலாவை நம் வாழ்வில் கடைப்பிடித்தால், சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்கிறார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் பாக்யேஷ் குல்கர்னி கூறுகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, எம்ஆர்பிஎஸ் ஃபார்முலா உள்ளிட்ட சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் உதவியுடன், மருந்து இல்லாமல் சர்க்கரை அளவை அனைவரும் எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்.
MRPS சூத்திரம் என்றால் என்ன?
MRPS சூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இங்கே அதனை விரிவாக புரிந்து கொள்ளலாம்:
M - பால் மற்றும் இறைச்சி (Milk & Meat). அதாவது பேக்கேஜ் செய்யப்பட்ட பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதோடு இறைச்சி, ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் அசைவப் பொருளாகும், இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். உண்மையில், இறைச்சி மற்றும் பால் இரண்டும் பதப்படுத்தப்படுகின்றன. இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
R - R என்பது ரீஃபைன் செய்யப்பட்ட உணவுகள். சுத்திகரிக்கப்பட்ட மாவு, சுத்திகரிக்கப்பட்ட பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற அனைத்து சுத்திகரிக்கப்பட்ட உணவுகளிலிருந்தும் விலகி இருப்பது. இந்த பொருட்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்குள்ள செயலாக்கம் இந்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்தை நீக்குகிறது.
P - P என்பது ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகள். பிஸ்கட், சிப்ஸ் மற்றும் பர்கர்கள் அல்லது பீட்சா உட்பட அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகள். நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனெனில் இந்த உணவுகள் அனைத்தும் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன.
S - S என்றால் சர்க்கரை மற்றும் உப்பு (Salt & Sugar). வெள்ளைச் சர்க்கரை, உப்பு இரண்டுமே இவர்களுக்கு நல்லதல்ல. இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கவும். உப்புக்கு, வெள்ளை உப்புக்கு பதிலாக, நீங்கள் ஹிமாலயன் பிங்க் உப்பு அல்லது கல் உப்பு பயன்படுத்தலாம்.
எம்ஆர்பிஎஸ் ஃபார்முலா சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
MRPS சூத்திரத்தை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் நிச்சயம் பலன் அளிக்கும் என்கிறார் மருத்துவர். அதன் தாக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், நீண்ட காலத்திற்கு இதைத் தொடர்ந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை மிக சிறப்பாக கட்டுப்படுத்தலாம் என்கிறார் மருத்துவர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் சிம்பிளான உணவுகள்
மேலும் படிக்க | மந்தமான மூளையும் புத்துணர்ச்சி பெறும்... நினைவாற்றலை பெருக்கும் சில அற்புத மூலிகைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ