Diabetic Food Diet Chart: இந்தியாவில் நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் அவதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். உணவை கட்டுப்பாடோடு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். டைம் 1, டைப் 2, கர்ப்ப கால நீரிழிவு போன்றவையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீரிழிவு நோயாயை குணப்படுத்த உணவில் சில மாற்றறங்களை செய்வது அவசியம். மேலும், எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து மருத்துவர் சர்மிகா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் அவர் விளக்கம் அளித்தார்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகள்
மருத்துவர் கூறுகையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் டீ, காபி கட்டாயம் நிறுத்த வேண்டும். பால் என்பது இனிப்பு தன்மை உடையது தான். எனவே, டீ, காபி குடித்துக் கொண்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் அதனை தவிர்க்க வேண்டும். நிறுத்த முடியாதவர்கள் ஒரு வேளை பால், சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம். நடைபயிற்சியுடன் சேர்த்து, உடற்பயிற்சி, strength Training போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இது இல்லையென்றாலும், தினமும் 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம்.
மருத்துவர் விளக்கம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எங்கெயும் கீழே விழாமல் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் சரியாகுது. எனவே, வெளியே செல்லும் கவனமுடன் இருக்க வேண்டும். வெறுங் காலில் நடப்பதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். எப்போதுமே காலணிகள் அணிய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உறக்கம் மிகவும் அவசியம். தூக்கம் இல்லையெனில் மன அழுத்தம், சோர்வு, ஏரிச்சல் உண்டாகும். எனவே, சர்க்கரை நோயாளிகள் 10 மணிக்குள் தூங்குவதை பழகிக் கொள்ள வேண்டும். இரவு 10 மணிக்கு தூங்கி, காலை 5 அல்லது 6 மணிக்கு கூட எழுந்திருக்கலாம். ஆனால், தூக்கம் ரொம்ப முக்கியம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளை அரிசி சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, ஒரு வேளை அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. காலையில் இட்லி, இரவு சப்பாத்தி, மதியம் மட்டும் வெள்ளை சாதம் என்று எடுத்துக் கொண்டிருப்பதால், இதனை தவிர்ப்பது நல்லது. கார்போஹைட்ரேட் என்பது இட்லி, தோசை, சப்பாத்தியில் இருக்கிறது.
எனவே, இதனை தவிர்த்துவிட்டு, மதிய உணவுக்கு மட்டும் அரிசில் எடுத்துக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவில் சிறுதாணிய உணவுகளை எடுப்பது சிறந்தது. இந்த ஐந்து விஷயங்களை ஒரு மாதம் கடைபிடித்து, உங்கள் சர்க்கரை அளவை பாருங்கள். இதனை நீங்கள் 6 மாதத்திற்கு கடைபிடித்தால், உங்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறினார்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க புல்லட் காபி குடிக்கலாமா? மருத்துவர் சொல்லும் டிப்ஸ்
மேலும் படிக்க: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இரவில் இதை செய்வது அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









