தினமும் இதை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Benefits Of Barley Water: பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Mar 18, 2025, 05:58 PM IST
  • பார்லி தண்ணீர் என்றால் என்ன?
  • அதனை குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தினமும் இதை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

முதலில் பார்லி தண்ணீர் என்றால் என்ன என்பதே இங்கு நம் பலபேருக்கு தெரியாது. பார்லி என்பது புல் வகையை சேர்ந்த தானியப் பயிர் ஆகும். சொல்லப்போனால் அரிசி போன்று சிறிதாக இருக்கும். இந்த பார்லி ஆனது ரொட்டி, சூப் உள்ளிட்ட உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக இது கால்நடைகளின் தீவனமாக இருக்கிறது. கால்நடை தீவனம் என குறிப்பிடவும் இதனை சாதாரணமாக நினைத்துவிட வேண்டும். இதில் நமது உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. இந்த பார்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டினால் பார்லி தண்ணீர் தயாராகிவிடும். இதனை தினமும் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் 

பார்லி தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலை தடுக்கிறது. அதேபோல் இந்த பார்லியில் பீட்டா குளுக்கன்களும் உள்ளன. அவை குடலின் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. தினமும் ஒரு கிளாஸ் பார்லி தண்ணீரை குடிப்பதால் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரிப்பதோடு, வீக்கம் மற்றும் அசெளகரியத்தை குறைக்கிறது.

சிறுநீரகத்திற்கு நல்லது 

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க பார்லி முக்கிய பங்காற்றுகிறது. பார்லி நச்சுகளை வெளியேற்றி சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை தடுக்க உதவுகிறது. அதேபோல் பார்லி தண்ணீரை தினமும் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவது குறைக்கிறது. 

மேலும் படிங்க: கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... சியா விதைகளில் புதைந்திருக்கும் எக்கச்சக்க நன்மைகள்

எடையை குறைக்க உதவுகிறது

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் பார்லி தண்ணீரை குடிக்கலாம். இதில் கலோரிகளை குறைவாக இருக்கும் அதேசமயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியமாக உங்கள் எடையை குறைக்கலாம். 

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோய்யால் அவதிபட்டு வருவோருக்கு பார்லி தண்ணீர் மிகவும் நல்லது. பார்லி தண்ணீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை காட்டிலும் பார்லி தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைவாகதாக கூறப்படுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பார்லி தண்ணீரில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துகிறது. இது உடல் தொற்று அல்லது நோய்வாய்ப்படுவதை தடுக்கிறது. 

இதயத்திற்கு நல்லது 

பார்லி தண்ணீர் இதயத்திற்கு மிக நல்லது. ஏன்னென்றால் பார்லியில் உள்ள பீட்டா-குளுக்கன்கள் கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைக்கின்றன. இதன் காரணமாக நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. அதேசமயம் இது இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. 

சருமம் மற்றும் முடிக்கு நல்லது 

பார்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் முக்கிய வைட்டமின்கள் நிறைந்து உள்ளன. இது பளபளப்பான சருமத்தையும் ஆரோக்கியமான கூந்தலையும் ஊக்குவிக்கிறது. இது உங்களை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது. அதேபோல் முடி உதிர்தலை தடுத்து நல்ல வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. 

பார்லி தண்ணீரை தயார் செய்வது எப்படி? 

முதலில் ஒரு கப் பார்லியை எடுத்து கழுவிக்கொள்ளுங்கள். இதையடுத்து அந்த பார்லியில் 7 முதல் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பின்னர் பார்லி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து குடிக்கலாம்.  

மேலும் படிங்க: உடல் பருமன் முதல் அஜீரணம் வரை.... சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு கட்டாயம் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News