உச்சி முதல் பாதம் வரை நமது உடல் முழுவதையும், கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். மூளையின் செயல் திறன் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்நிலையில், மூளையில் திரவம் சேர்ந்து இருப்பதற்கான அறிகுறிகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
கடுமையான நிலைமைகளை தவிர்க்க நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் அவசியம்
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, மூளை சார்ந்த பிரச்சினை என்பது குழந்தை முதல் முதியவர் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக உடல் நல பிரச்சனைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தாலே, பல கடுமையான நிலைமைகளை தவிர்க்கலாம்.
மூளையை மட்டுமல்லாமல் முதுகெலும்பையும் பாதிக்கும் ஹைட்ரோசிபாலஸ்
ஹைட்ரோசிபாலஸ் என்னும் மூளையில் அதிக திரவம் சேர்ந்து இருப்பது தொடர்பான நரம்பியல் பாதிப்பில், மூளையில் அழுத்தத்தை அதிகரித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மூளையை மட்டுமல்லாமல் முதுகெலும்பையும் பாதிக்கிறது.
மூளையில் திரவம் நிரம்பி இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்
காலையில் ஏற்படும் கடுமையான தலைவலி
சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே கடுமையான தலைவலி இருக்கலாம். இதற்கு மன அழுத்தம் உள்ளிட்ட பிற உடல்நல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் என்றாலும், இது மூளையில் திரவம் சேர்ந்து இருப்பதற்கான அறிகுறி என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடனடியாக நரம்பியல் வல்லுனரை கலந்த ஆலோசிப்பது நல்லது.
தலைவலியுடன் ஏற்படும் குமட்டல் வாந்தி
தலைவலி மட்டுமல்லாது, காலையில் எழுந்திருக்கும் போதே குமட்டல் வாந்தி பிரச்சனைகள் இருந்தால், அதனை அலட்சியப்படுத்த வேண்டாம். மைக்ரேன் அல்லது ஒற்றை தலைவலியில் இந்த அறிகுறிகள் தென்படும் என்றாலும், தொடர்ச்சியாக அல்லது அடிக்கடி இவ்வாறு ஏற்படுவது, மூளையில் திரவ அதிகரிப்பின் அல்லது அழுத்தத்தின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை பிரச்சனை
மூளையில் அழுத்தம் அதிகரிப்பதால், கண் நரம்புகளிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தெளிவான பார்வை இல்லாமல் மங்கலான பார்வை இருக்கலாம். அல்லது பொருட்கள் இரண்டு இரண்டாக தோன்றும், இரட்டை பார்வை பிரச்சனை ஏற்படலாம். கண்களில் உள்ள கண்மணிகளில் பாதிப்பு ஏற்படுவதால் இந்த நிலை உண்டாகும்.
நடக்கும்போது எழுந்திருக்கும் போது சமநிலை தவறுதல்
மூளை நரம்புகள் பாதிக்கும் போது, சமநிலை தவறுகள் என்பது அடிக்கடி ஏற்படலாம். அதேபோல் நடக்கும் விதத்திலும் அசாதாரணமாக மாற்றங்கள் இருந்தால் அலட்சியம் செய்யக்கூடாது. இந்த அறிகுறி ஹைட்ரோ ஹைட்ரோ கேபாலிசின் அறிகுறியாக இருக்கலாம். அதிலும் முதுமை பருவத்தில் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
மனநிலை மாற்றங்கள்
மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு, சிந்திக்கும் திறனை பாதிக்கும் என்பதால், நடத்தையில் திடீர் மாற்றங்கள், எரிச்சல் உணர்வு, மறதி ஆகியவை அதிகம் ஏற்படும்.
மூளைக்கு நிரந்தர பாதிப்பு ஏதும் ஏற்படுவதை தவிர்க்க செய்ய வேண்டியவை
ஹைட்ரோசெபாலிஸ் என்னும் மூளையில் திரவம் சேரும் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கொண்டு உடனடியாக சிகிச்சை அளித்தால், மூளைக்கு நிரந்தர பாதிப்பு ஏதும் ஏற்படுவதை தவிர்க்க முடியும். நோயை சரியான நேரத்தில் கண்டறிய, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் பெரிதும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ